- Advertisement -
இந்திய கிரிக்கெட்

9 மாசம் முடிஞ்சும் அதை சமாளிச்சு ஜெயிக்கும் துணிச்சல் வரல.. இந்திய பேட்ஸ்மேன்களால் கேப்டன் ரோஹித் கவலை

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த ஒருநாள் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு தொடரில் தோற்காமல் இருந்து வந்த கௌரவத்தை இந்தியா நழுவ விட்டுள்ளது. அத்துடன் 2010க்குப்பின் 14 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த தோல்விக்கு இலங்கையின் ஸ்பின்னர்களை சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் விராட் கோலி உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடாமல் அவுட்டாகி தோல்விக்கு காரணமானார்கள்.

- Advertisement -

ரோஹித் கவலை:
இந்நிலையில் 2023 உலகக்கோப்பை ஃபைனல் உட்பட கடந்த காலங்களில்சுழலுக்கு சாதகமான ஸ்லோவான பிட்ச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறியதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஆனால் 9 மாதங்கள் கழித்தும் அது போன்ற பிட்ச்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதாக அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அதில் முன்னேற வேண்டும் என்று தெரிவிக்கும் ரோஹித் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“அது போன்ற பிட்ச்சில் நீங்கள் இடது – வலது கை பேட்ஸ்மேன்கள் சேர்க்கையை முயற்சிக்க வேண்டும். இருப்பினும் நாளின் இறுதியில் பந்து சுழலக்கூடிய இது போன்ற ரன்கள் அடிப்பதற்கு சவாலான பிட்ச்சில் நீங்கள் போட்டியை முன்னோக்கி எடுத்துச் செல்வது முக்கியம். அதற்கு உங்களுக்கு கொஞ்சம் துணிச்சல் வேண்டும். ஆனால் இந்த தொடர் முழுவதும் முழுவதும் எங்களிடம் அந்தத் துணிச்சல் போதுமானதாக இருந்ததாக எனக்கு தெரியவில்லை”

- Advertisement -

“நாங்கள் துணிச்சலாக விளையாடி எதிரணி பவுலர்களை அழுத்தத்திற்குள் தள்ளுவதில் பின்தங்கி விட்டோம். ஆனால் இது போன்ற விஷயங்கள் நடைபெறுவது சகஜம் என்பதால் அதிகமாக அதைப் பற்றி சிந்திக்கவில்லை. அதே சமயம் அதில் நாங்கள் முன்னேற வேண்டும். கடந்த காலங்களிலும் எங்களிடம் இந்த பிரச்சனை இருந்தது. போட்டியின் வேகத்தை தொடர்ந்து எடுத்துச் செல்வதில் எங்களிடம் பிரச்சனை உள்ளது”

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவின் முடிவுகளில் தலையிடும் கவுதம் கம்பீர்.. கோச் மீது அதிருப்தியில் இருக்கும் ரோஹித் சர்மா – என்ன நடந்தது?

“அது தனிநபரின் திட்டங்களைப் பின்பற்றி பவுலர்களை எப்படி அடிக்க வேண்டும் என்பதை பொறுத்தது. தனிநபர் வீரர்கள் அதை கொஞ்சம் வித்தியாசமாக செய்திருக்க வேண்டும். எனவே சுழலுக்கு அல்லது வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் என்பதை தாண்டி அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் எப்படி நல்ல அணியாக செயல்பட முடியும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி முன்னேற முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -