எப்படியாவது ஆர்சிபி தோற்கணும் ! ரசிகர்களை போல ஆசைப்படும் நட்சத்திர டெல்லி வீரர் – முழு விவரம்

DC vs PBKS 2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுப் போட்டிகள் உச்சகட்ட பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏனெனில் இதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் மும்பை மற்றும் சென்னை ஆகிய 2 அணிகளை தவிர எஞ்சிய 8 அணிகள் கடும் போட்டி போட்டு வருகின்றன. இதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை முதல் 8 போட்டிகளிலும் வரிசையாக தோல்வியடைந்து வரலாற்றில் மோசமான சாதனையை படைத்து லீக் சுற்றுடன் முதல் அணியாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டது.

MI vs DC IPL 2022

- Advertisement -

அதேபோல் 4 கோப்பைகளை வென்று வெற்றிகரமான 2-வது ஐபிஎல் அணி என்ற பெயர் மட்டுமல்லாது நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் விளையாடிய சென்னையும் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 7 தோல்விகளை பதிவு செய்துள்ளதால் மும்பையை தொடர்ந்து 2-வது அணியாக வெளியேறுவது உறுதியாகியுள்ளது. மறுபுறம் 8 வெற்றிகளை பதிவு செய்து முதலிடத்தில் உள்ள குஜராத்தும் 7 வெற்றிகளை பதிவு செய்து 2-வது இடத்திலுள்ள லக்னோவும் புதிய அணிகளாக இருந்தாலும் தொடர் வெற்றிகளால் முதல் சீசனிலேயே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகி உள்ளது.

டெல்லி போகுமா:
எஞ்சிய 2 இடங்களுக்கு ராஜஸ்தான், பெங்களூரு, ஹைதராபாத், பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா ஆகிய 6 அணிகள் போட்டி போடுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது. இந்த நிலைமையில் மேற்குறிப்பிட்ட அணிகள் தங்களது எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தாராளமாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 9 போட்டிகளில் 4 வெற்றி 5 தோல்விகளை பதிவு செய்துள்ள ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் எஞ்சிய 5 போட்டிகளில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற போராட உள்ளது.

Dc

பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒரு குறிப்பிட்ட அணி ரசிகர்கள் தங்களது அணி வெற்றி பெற வேண்டும் என்பதுடன் எதிரணி தோல்வி அடைய வேண்டும் அப்போதுதான் தங்களது அணி எளிதாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று ஆசைப்படுவார்கள். அந்த வகையில் டெல்லிக்காக விளையாடும் நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பெங்களூரு அணி தோற்க வேண்டும் என்று ஆசைப்படுவதுடன் அதை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

- Advertisement -

ஆர்சிபி தோற்கணும்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த சூழலிலிருந்து நாங்கள் முன்னோக்கி நடைபெற உள்ளோம். அடுத்து வரும் அனைத்துப் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பைனலுக்கு நாங்கள் தகுதி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு எதிராக கடும் போட்டியளிக்கும் வகையில் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் உள்ளன. அதிலும் ஐதராபாத் நாங்கள் பெற்றுள்ள புள்ளிகளையே போலவே பெற்றுள்ளது. எனவே ஹைதராபாத் அணியை தோற்கடித்தால் எங்களின் கை ஓங்கி விடும்”

David Warner vs RCB

“அதனால் நாங்களும் புள்ளி பட்டியலில் முதல் 4 இடத்திற்குள் நுழைந்து விடுவோம். அதேசமயம் பெங்களூரு தோல்வியடைவதற்கு துவங்கினால் அது எங்களுக்கு வசதியாக இருக்கும். தற்போதைய நிலைமையில் புள்ளி பட்டியலில் விறுவிறுப்பான கட்டம் ஏற்பட்டுள்ளது எஞ்சிய ஐபிஎல் தொடரை பரபரப்பாக்கியுள்ளது” என்று கூறியது ரசிகர்களிடையே கலகலப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் பெரிய இலக்கை சேசிங் செய்யும் போது அதை நெருங்கிய போதிலும் தொட முடியாமல் தோற்றோம் என்பதால் அதை இனி வரும் போட்டிகளில் சரி செய்வோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -

ஹைதெராபாத்துக்கு எதிராக:
கடந்த 2015 முதல் ஒவ்வொரு வருடமும் மலைபோல ரன்களைக் குவித்து 2016இல் கேப்டனாக சாம்பியன் பட்டத்தையும் வாங்கிக் கொடுத்து பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்து ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நாயகனாக டேவிட் வார்னர் வலம் வந்தார்.

warner 1

ஆனால் 2021இல் முதல் முறையாக ரன்கள் அடிக்க தவறினார் என்ற காரணத்திற்காக முதலில் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய அந்த அணி நிர்வாகம் அதன்பின் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்தும் நீக்கியதுடன் பெஞ்சில் அமர வைத்து கூல்டிரிங்ஸ் தூக்க வைத்து கடும் அவமானப்படுத்தி இறுதியில் கழற்றி விட்டது.

இதையும் படிங்க : இப்படியே போனா டெஸ்ட் கிரிக்கெட் அழிஞ்சிடும். யாரும் விளையாட மாட்டாங்க – யுவராஜ் சிங் அதிருப்தி

இந்நிலையில் தன்னை வெளியேற்றிய சன் ரைசர்ஸ் அணிக்கெதிராக விளையாட இருக்கும் போட்டி குறித்து பேசிய அவர் : “இதர போட்டிகளை போல அதிலும் சாதாரணமாகவே விளையாட உள்ளேன். வெற்றி கிடைக்கும் வரை நல்ல பயிற்சி எடுத்து சிறப்பாக விளையாடுவதற்கான வேலைகளை செய்துள்ளேன்” என்று கூறினார்.

Advertisement