பாபர் அசாமை விட உங்கள தான் பிடிக்கும் ப்ளீஸ், விராட் கோலிக்கு பாக் ரசிகர்கள் வைத்த மனமுருக்கும் கோரிக்கை – நடக்குமா

Virat Kohli Fans
- Advertisement -

ஆசிய கண்டத்தின் டாப் 2 கிரிக்கெட் அணிகளாக திகழும் இந்தியாவும் பாகிஸ்தானும் பரம எதிரிகளாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் நட்புடன் தரமான இருதரப்பு போட்டிகளில் மோதி வந்தன. ஆனால் நாளடைவில் எல்லை பிரச்சினை காரணமாக ஏற்பட்ட விரிசலால் கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்துள்ள இவ்விரு நாடுகளும் ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் 3 போட்டிகளில் மோதிய இவ்விரு அணிகள் அடுத்த வருடம் மீண்டும் மோதுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் 2023இல் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பங்கேற்காது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். ஆனால் ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் நீங்கள் இப்படி பேசியது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் அதே 2023இல் உங்களது நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்கள் வரமாட்டோம் என்று அறிவித்தது. அதை பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவும் அடுத்தடுத்த பேட்டியில் உறுதிப்படுத்தி வருவதால் இது பற்றி இருநாட்டு வாரியங்களிடடையே அதிகமான பரபரப்பு காணப்படுகிறது.

- Advertisement -

நீங்க தான் கிங்:
ஆனால் கிரிக்கெட்டை நேசிக்கும் உண்மையான ரசிகர்கள் விளையாட்டில் அரசியல் எதற்கு என்ற கருத்துடன் பாகிஸ்தானில் இந்தியா விளையாட வேண்டும் என்றே கூறுகிறார்கள். ஏனெனில் இரு வாரியங்களும் கடைபிடிக்கும் வறட்டு கௌரவத்தால் இரு நாடுகளைச் சேர்ந்த தரமான வீரர்கள் மோதுவதை பார்ப்பதற்கு இப்போதெல்லாம் வருட கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக சமீபத்திய டி20 உலக கோப்பையில் வரலாற்றின் மிகச்சிறந்த டி20 இன்னிங்ஸ் விளையாடி அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த விராட் கோலி தங்களது மண்ணில் விளையாடுவதை பார்க்க முடியாமல் நிறைய பாகிஸ்தான் ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் 72 சதங்களையும் ஏராளமான ரன்களையும் குவித்து சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து கிங் கோலி என்ற பெயரை வாங்கியுள்ள அவருக்கு இந்தியாவுக்கு நிகராக பாகிஸ்தானிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளதை அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் தற்போது முல்தானில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சில பாகிஸ்தான் ரசிகர்கள் “ஹாய் கிங் கோலி. நாங்கள் உங்களை மிகவும் விரும்புகிறோம். எங்கள் நாட்டுக்கு வந்து ஆசிய கோப்பையில் விளையாடுங்கள்” என்றும் “நாங்கள் எங்களுடைய கிங் பாபர் அசாமை விட உங்களைத் தான் அதிகமாக விரும்புகிறோம்” என்ற வாசக அடங்கிய பதாகைகளை கையில் பிடித்து உண்மையான அன்பை வெளிப்படுத்தி கோரிக்கை வைத்தது அனைவரது நெஞ்சங்களை தொட்டது.

- Advertisement -

அதிலும் சில வருடங்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட்டதால் சச்சின் டெண்டுல்கர், டான் பிராட்மேனை விட பாபர் அசாம் தான் கிரிக்கெட்டின் கிங் என்று நிறைய பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தம்பட்டம் அடிக்கும் வேளையில் பல வருடங்களாக அபாரமாக செயல்பட்டு உண்மையான கிங் என பெயரெடுத்த விராட் கோலியை அதிகம் விரும்புவதாக பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவிப்பது உண்மையாகவே நாடு மற்றும் எல்லைகளைக் கடந்த அன்பாகும்.

இதையும் படிங்க: IND vs BAN : இந்திய அணியின் வெற்றியை தடுக்க குறுக்கு வழியை கையாளப்போகும் பங்களாதேஷ் – விவரம் இதோ

இதை விராட் கோலி நிச்சயம் பார்த்தால் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற சம்மதம் தான் தெரிவிப்பார். பாகிஸ்தான் வாரியமும் தங்களது நாட்டுக்கு வரச் சொல்லி இந்தியாவுக்கு சிவப்பு கம்பளம் பிரிக்கும் நிலையில் பிசிசிஐ தான் மறுப்பு தெரிவிக்கிறது. அத்துடன் சமீப காலங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து உட்பட உலகின் அனைத்து டாப் அணிகளும் பாகிஸ்தானுக்கு சென்று பாதுகாப்புடன் விளையாடின. அதனால் இந்த விஷயத்தில் இருநாட்டு வாரியங்களும் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதை இருநாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement