இந்தியாவ விட சிறந்த அணி என்பதாலேயே நாங்க ஃபைனல் வந்துருக்கோம் – பாக் வீரர் கெத்தான பேச்சு

Shadab-Khan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை இன்றுடன் நிறைவு பெறுகிறது. முதல் நாளிலிருந்தே எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறிய இந்த தொடரில் ஆரம்பத்திலேயே வெற்றிகரமான வெஸ்ட் இண்டீஸ் வெளியேறிய நிலையில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. அதை விட ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்பேவிடம் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென்னாபிரிக்க தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதிக்குள் நுழைந்து நியூசிலாந்தை தோற்கடித்த ஃபைனலுக்கு தகுதி பெற்று அனைவரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.

PAK vs ENG Jose Buttler Babar Azam

- Advertisement -

அதே போல் ஆரம்பத்தில் கத்துக்குட்டி அயர்லாந்திடம் வரலாற்றில் முதல் முறையாக தோற்றாலும் எஞ்சிய போட்டிகளில் அசத்தலாக செயல்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து செமி ஃபைனலில் வலுவான இந்தியாவை அடித்து ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக கடந்த 1992இல் இதே ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இதே போல் ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டெழுந்து அதிர்ஷ்டத்துடன் அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்து ஃபைனலில் இங்கிலாந்தை வீழ்த்திய இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் கோப்பையை வென்றது.

சிறந்த பாகிஸ்தான்:

தற்போதும் அதே போலவே இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்வதால் பாகிஸ்தான் நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதிலும் குறிப்பாக 1992 ஃபைனல் நடைபெற்ற அதே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இம்முறை ஃபைனல் நடைபெறுவது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

VIrat Kohli IND vs PAK.jpeg

ஆனால் இதே மைதானத்தில் தான் இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே பரம எதிரி இந்தியாவிடம் கையில் வைத்திருந்த வெற்றியை விராட் கோலி அபாரமான ஆட்டத்தால் பாகிஸ்தான் கோட்டை விட்டது. எனவே அதை மனதில் வைத்துக்கொண்டு ஃபைனலில் பாகிஸ்தான் விளையாடும் என்று நம்பலாம். ஆனால் அப்போட்டியில் சிறப்பாக விளையாடியும் ஃபினிஷிங் செய்ய தவறியதால் வெற்றி பறிபோனதாக தெரிவிக்கும் துணை கேப்டன் சடாப் கான் இந்தியாவை விட பாகிஸ்தான் சிறந்த அணி என்பதாலேயே தற்போது ஃபைனலில் மீண்டும் அதே மைதானத்தில் விளையாடுவதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஃபைனலுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுக்கும் அனைவருக்கும் பாகிஸ்தான் – இந்தியா போட்டி மிகப் பெரியது. அதனால் நாங்கள் அதில் வெற்றி பெற முயற்சித்தோம். சொல்லப்போனால் சிறு வயதிலிருந்தே இதர அணிகளுக்கு எதிராக வெல்வதை விடவும் உலக கோப்பையை வெல்வதை விடவும் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கனவாக இருந்தது. அதே போன்ற அழுத்தத்துடன் இந்த இறுதிப் போட்டியில் விளையாட உள்ளோம். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான 2 போட்டிகளிலுமே நாங்கள் அபாரமாக செயல்பட்டும் கடைசி 3 பந்துகளில் சொதப்பினோம்”

Shadab

“அந்த இரு தருணங்களிலும் நவாஸ் தடுமாறினார். அதனால் போட்டி முடிந்த பின் அவர் என்னிடம் “நான் இதை மறக்க முயற்சிக்கிறேன் ஆனால் முடியவில்லை. ஒவ்வொரு காலையில் எழுந்திருக்கும் போதும் 3 பந்துகளில் 13 ரன்கள் விட்டதையும் 3 பந்துகளில் 3 ரன்களை எடுக்க தவறியதுமே நினைவுக்கு வருகிறது” என்று கூறினார். அந்த வகையில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம் ஆனால் பினிஷிங் செய்யவில்லை. நாங்கள் எப்போதுமே எங்களுடைய 100% அர்ப்பணிப்பை கொடுக்க விரும்புகிறோம்”

“நாங்கள் எங்களுடைய 100% அர்பணிப்பை கொடுத்தால் முடிவும் எங்களுக்கு சாதகமாக வரும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் 100% அர்ப்பணிப்பை கொடுத்தும் நாங்கள் பினிஷிங் செய்யவில்லை. ஆனால் இந்தியாவை விட நாங்கள் சிறந்த அணி என்பதை இப்போதும் அறிவோம்” என்று கூறினார். முன்னதாக அப்போட்டில் சந்தித்த தோல்விக்கு பழிவாங்க வேண்டும் என்பதற்காக 2வது அரையிறுதியில் இங்கிலாந்து தோற்க வேண்டுமென இவர் உட்பட அனைத்து பாகிஸ்தானை சேர்ந்தவர்களும் வெளிப்படையாக அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement