தீபக் சாஹரை முன்கூட்டியே இறக்கியதற்கு இதுதான் காரணம்..! – தோனியின் மாஸ்டர் பிளான் ..!

deepak
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் கடைசி லீக் போட்டி புனேவில் நேற்று(மே 20) நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணி மோதியது. இந்த போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தினால் மட்டுமே பிலே ஆப் சுற்றிற்ற்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான கட்டாயத்தில் இருந்தது பஞ்சாப் அணி. இந்த போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது. பின்னர் களமிறங்கி சென்னை அணி 19.1 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

miller

- Advertisement -

இந்த போட்டிக்கு பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பேசுகையில் “இது மிகவும் கடினமான ஆட்டமாக இருந்தது. நாங்கள் சரியாக பேட்டிங் செய்ய்யவில்லை, பவர் பிளே ஒவேர்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து விட்டோம், இருப்பினும் கருண் நாயர் சிறப்பாக விளையாடினார்.எங்கள் அணிக்கு ஏப்ரல் மாதம் சிறப்பாக இருந்தது ஆனால் மே மாதம் மோசமாக அமைந்து விட்டது. எங்கள் அணி பெங்களூருக்கு எதிரான போட்டியில் தோற்றது பாதமாக அமைந்து விட்டது. சென்னை அணி இன்று சிறப்பாக விளையாடியது , எங்கள் அணியில் ஒரு சிறப்பான கலாச்சாரத்தை உண்டாகி இனி வரும் போட்டிகளில் வெல்வோம்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பின்னர் பேசிய வெற்றி கேப்டன் தோனி “இந்த போட்டியில் அன்கிதின் பந்து நன்றாக சுழன்றது. கேப்டன் கோணத்தில் இருந்து பார்க்கும் போது , அணியில் விக்கெட்டுகளை கைவசம் வைத்திருக்க வேண்டும். அதனால் நான் ஹர்பஜனையும், சஹாலையும் களமிறக்கினேன், நல்ல பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது பவுன்சர்களையும், ஏற்கர்களையும் பஞ்சாப் பந்து வீச்சாளர்கள் வீசினர். ஆனால் ஹர்பனுக்கும், சஹாலுக்கும் பந்து வீசும்போது அவர்களது பந்து வீசும் நீளத்தில் குழப்பம் தெரிந்தது. ”

சென்னை அணியின் உரிமையாளர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டார்கள். அவர்கள் நெருக்கமான வீரர்களை அணியில் இடம்பெற வைத்தார்கள். அவர்களுக்கு இந்த போட்டிக்கான வரலாறுகள் நன்றாக தெரிந்திருந்தனர். உங்களிடம் நல்ல அணி இல்லை என்றால் நீங்கள் வெற்றி பெறுவது கடினமாகி விடும். நாங்கள் அணியில் வீரர்களை சேர்த்துக் கொண்டே இருந்தோம், அவர்களும் நன்றாக விளையாடினர்.

- Advertisement -

ஆனால் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்த இது கடினமாகி விடும், ஏனென்றால் இதில் உள்ள பெரும்பான்மையான வீரர்கள் 20 ஓவர்கள் போட்டியில் விளையாட பொருத்தமில்லாதவர்களாக போய்விடுவார்கள் கடந்த 10 ஆண்டுகளை திரும்பி பார்த்தல் எங்கள் அணி சிறப்பாக வளையாடியுள்ளது. எங்கள் அணி ஒரு சில ஆண்டுகளில் இறுதி போட்டியில் செய்த தவறுகளை என்னால் நினைவு கூற முடிகிறது.

chahar

இது இந்த போட்டியின் இயல்பு ஒரு பெரிய ஷாடோ, ஒரு ரன் அவுடோ ஆட்டத்தின் போக்கை மாற்றி விடும். அணைத்து அணிகளுமே பிளே ஆப் சுற்றிற்கு நுழைய பாடுபட்டனர். ஆனால்முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிக்கு மட்டும் ஒரு மறு வாய்ப்பு இருக்கிறது.” என்ற தெரிவித்துள்ளார்.

Advertisement