Whatsapp : தேவையற்ற குரூப்பில் நீங்கள் இடம்பெறாமல் இருக்க வந்துவிட்டது – புது வாட்ஸ்அப் இதோ

Whatsap
- Advertisement -

உலக அளவில் வாலிபர்கள் மட்டுமின்றி அனைவரும் தங்களது குறுந்தகவல்களை இணையதளம் மூலம் எளிமையாக பகிந்துகொள்ள முக்கிய செயலியாக மாறியுள்ளது வாட்ஸ்அப். தற்போதைய நவீன காலத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களையே பெரிதும் உபயோகித்து வருகின்றனர். அதிலும் வாட்ஸ்அப் செயலியை அனைவரும் உபயோகித்து வருகின்றனர்.

Whatsapp

- Advertisement -

இந்த வாட்ஸ்அப் செயலி மூலம் புகைப்படம், வீடியோ மற்றும் சவுண்ட் என அனைத்தும் எளிதாக பகிரக்கூடிய ஒரு தளமாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. வாட்ஸ்அப் செயலியின் படிப்படியான முன்னேற்றம் காரணமாக வாட்ஸ்அப் செயலியில் குரூப் மூலம் மொத்தமாக அனைவரும் மெசேஜ் செய்யும் முறையும் அறிமுகமானது.

ஆனால், குரூப் மெசேஜ் சேட்டில் இணைந்தால் அடிக்கடி மெசேஜ் வந்து நம்மை எரிச்சல் அடைய வைக்கும். தற்போது இந்த குரூப் மெசேஜ் வருவதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது அதன் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி குரூப் மெசேஜ் மற்றும் எந்த குரூப்பில் நீங்கள் இணைய வேண்டும் என்று நீங்களே முடிவெடுக்கலாம். இதோ அதற்கான எளிய வழிமுறைகள் :

முதலில் வாட்ஸ்அப் அக்கவுண்டிற்கு சென்று அதில் பிரைவசி சென்று அதில் குரூப் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அதில் nobody, ny contacts மற்றும் everyone என்ற மூன்று ஆப்ஷன்களை காண்பிக்கும். nobody என்ற வார்த்தையை கிளிக் செய்தால் யாருமே உங்களை புதிய குரூப்பில் சேர்க்க முடியாது. my contacts என்ற வார்த்தையை கிளிக் செய்தால் உங்களது போன் லிஸ்டில் இருப்பவர்கள் மட்டும் உங்களை குரூப்பில் சேர்க்க முடியும். everyone என்ற வார்த்தையை கிளிக் செய்தால் யார்வேண்டுமென்றாலும் உங்களை கண்ட குரூப்பில் சேர்க்க முடியும். இதில் எது உங்களுக்கு பொருந்துகிறதோ அதனை நீங்கள் எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம்.

Advertisement