ஆலன் பார்டரே இவரது பேட்டிங் டெக்னீக் பாத்து அசந்துட்டாரு. இந்திய அணியின் இளம்வீரரை புகழ்ந்த கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் 17ம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்குகிறது. இந்திய அணி அயல்நாட்டில் சந்திக்கும் முதல் பகல் இரவு போட்டி என்பதால் இந்த போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்று அனைவரும் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் மயங்க் அகர்வாலுடன் யார் துவக்க வீரராக களம் இறங்குவார்கள் என்ற கேள்வி தற்போது சமூக வலைதளத்தில் அதிகளவு விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதத்திலும், இந்த தொடர் குறித்த தனது கருத்தையும் ஒட்டுமொத்தமாக வெளியிட்ட சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது :

மயங்க் அகர்வால் உடன் சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்கலாம் அது மிகச் சரியாக இருக்கும். ஏனெனில் பயிற்சி போட்டியில் கில் மிகச்சிறப்பாக விளையாடினார். மேலும் கில் தற்போது சிறப்பான பார்மில் இருப்பதால் அவரால் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாட முடியும் என நினைக்கிறேன். அவரின் ஆட்டத்தை நேரில் பார்த்த ஆலன் பார்டர் அவரின் ஆட்டத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டு உள்ளார்.

gill 1

மேலும் அவரின் ஆட்டம் மிகவும் கவர்ந்து விட்டதாகவும் ஆலன் பார்டர் கூறியதாக அவர் சொன்னார். மேலும் தானும் அவருடைய பேட்டிங் டெக்னிக்கல் ஈர்க்கப்பட்டேன். அவரே துவக்க வீரராக விளையாட வேண்டும் எனவும் அவர் கூறினார். இதுகுறித்து ஆலன் பார்டர் பேசுகையில் : அவரது ஆட்டத்தை சிட்னியில் பார்த்தேன்.

Gill 2

அவரின் ஆட்ட நுணுக்கங்கள் சிறப்பாக இருக்கிறது. அவர் ஒரு மிகவும் இளம் வீரர் அதிரடியாக விளையாட முடியும். அதே நேரத்தில் பொறுப்புணர்வுடன் விளையாடி வருகிறார். அவரது பேட்டிங் டெக்னிக் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. இந்திய தேர்வுக்குழுவில் நான் இருந்தால் பிரித்திவி ஷாவுக்கு பதிலாக கில்லை ஆடும் அணியில் சேர்ப்பேன் என்று பார்டர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement