ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காக விளையாடியது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது – வாட்சன் வெளிப்படை

Watson 1
- Advertisement -

இந்தியன் பிரீமியர் லீக் பல நல்ல எண்டெர்டெயின்மன்டுகளை கொடுத்து வருகிறது. பல அதிரடி வீரர்கள் இந்த தொடரில் அமர்களப்படுத்தி வருகின்றனர். அந்த வீரர்களுள் முக்கியமானவர் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஆவார். அண்மையில் நடந்த ஒரு உரையாடலின் போது ஐபிஎல் தொடரில் தனது அனுபவத்தை பற்றி வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் போட்டி தொடரில் இதுவரையில் வாட்சன் மூன்று உரிமையாளர்களுக்காக விளையாடினார், அது ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும்.

- Advertisement -

ஐ.பி.எல்லில் வாட்சனின் சாதனை மிகவும் சுவாரஸ்யமானது. அவர் ஒரு வீரராக இதுவரை இரண்டு பட்டங்களை வென்றுள்ளார். தொடக்கத்தில் ஒரு முறை ராஜஸ்தானுடனும், சமீமத்தில் ஒரு முறை சென்னையுடனும் ஆகும். 2018 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னைக்காக ஆடிய அவர் சதம் அடித்தார். அதன் காரணமாக சென்னை ஹைதராபாத்தை மிக எளிதில் தோற்கடித்து தனுது மூன்றாவது பட்டத்தை வென்றது. வாட்சனுக்கு அது இரண்டாவது பட்டம் ஆகும்.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த 2020ஐபிஎல் போட்டி தொடரில் விளையாடிய பின்னர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

ஆர்.சி.பி அனுபவத்தைப் பற்றி பேசிய வாட்சன், அந்த உரிமையின் உரிமையாளர்களுக்கு உண்மையில் அணிமீது எந்தவித உணர்ச்சிகரமான தொடர்பும் இல்லை என்பதை வெளிப்படுத்தினார். இது ஒரு ஜானி வாக்கர் நிறுவனமான டியாஜியோவால் இயக்கப்பட்டது , இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் சம்மந்தப்பட்ட நிறுவனம். ஆனால் ஆர்சிபியில் நான் விளையாடிய போது பல திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தார்கள். அவர்களுடன் ஆடியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்று வாட்சன் கிரேடு கிரிக்கெட் போட்காஸ்டில் கூறினார்.

Watson2

தனது சிஎஸ்கே அனுபவத்தை ஒப்பிடுகையில் வாட்சன் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் பற்றி விரிவாக பேசினார். சி.எஸ்.கே உடனான முதல் இரண்டு சீசன்களில் ஒரு சீசனில் பட்டத்தை வென்றது மற்ற ஒன்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. உண்மையில், பேட்டிங்கைப் பொறுத்தவரை வாட்சனுக்கு இரண்டு மிகவும் திருப்திகரமான சீசன்களாக இருந்தன.

Watson

சிஎஸ்கே ஒரு நம்பமுடியாத அனுபவமாக இருந்தது – பல வயதான வீரர்களுடன் ஒரு அணியாக இருந்தது எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாகவே. எம்.எஸ். தோனியின் தலைமையின் கீழ் , ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் பயிற்சியாளராக இருந்த அணியின் கீழ் ஆடியது மகிழ்ச்சியான அனுபவம். நான் பணியாற்றிய அணிகளில் ஒரு சிறந்த பயிற்சியாளர் ஃப்ளெமிங். தனிநபர் குறித்தும் மற்றும் அணியின் சூழலைப் புரிந்துகொள்வது மற்றும் கிரிக்கெட் அறிவு ஆகியவை என்னை கவர்ந்தது. இறுதியாக எம்.எஸ்.தோனியுடன் இருந்த தொடர்பு எனக்கு அது ஒரு சூப்பர் கூல் அனுபவம் என்று தனது சிஎஸ்கே அனுபவத்தைப் பற்றி கூறி முடித்தார்.

Advertisement