ஐபிஎல் தொடரில் 18 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் ராகுல் அதிகபட்சமாக 63 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 33 ரன்களை குவித்தனர். அதன் பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். கடந்த நான்கு போட்டிகளாக துவக்க ஜோடி சோபிக்காத பட்சத்தில் இம்முறை வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்..
17.4 ஓவரில் 181 ரன்களை அடித்து சிஎஸ்கே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தொடரை இரண்டாவது வெற்றியை பெற்றது. வாட்சன் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 83 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 53 பந்துகளில் 87 ரன்களில் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் சி.எஸ்.கே பெற்ற வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் வாட்சன் கூறுகையில் : இன்று நான் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது. இந்த தொடர் ஆரம்பத்திலிருந்தே சிறிது தடுமாறினேன். ஆனால் இம்முறை சிறப்பாக விளையாடி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. முன் காலை நகர்த்தி ஆடுவதில் சிறிய மாற்றங்களை செய்துள்ளேன் என்னுடைய முழு எடையையும் பந்தின் மீது செலுத்தி விளையாட துவங்கிவிட்டேன்.
என்னுடன் விளையாடிய டூபிளெஸ்ஸிஸ் அருமையாக ஆடினார். அவர் ஒரு சிறப்பான வீரர், அவருடன் பேட்டிங் செய்வது சிறப்பான ஒரு விடயம்.அனுபவம் வாய்ந்த நாங்கள் இருவரும் அணிக்காக வெற்றி பெற்று கொடுத்திருப்பது மகிழ்ச்சி. அணி நிர்வாகத்தினர் வீரர்களை மிகவும் நம்புகிறார்கள். சிஎஸ்கே அணியில் இருக்கும்போது நான் எப்போதும் பதட்ட பட்டதே இல்லை இன்னும் சில விஷயங்களில் சிறப்பாக செய்ய வேண்டி உள்ளது என்று வாட்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பலமுறை தோனியும், கோச் பிளமிங் மற்றும் சி.எஸ்.கே நிர்வாகம் தன்மீது நம்பிக்கை வைத்து விளையாடவைத்து வருவதாகவும் அதற்காக நான் தொடர்ந்து சி.எஸ்.கே அணிக்காக விளையாட கடமைப்பட்டு இருக்கிறேன் என்று வாட்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தோனி வாட்சன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது