மைதானத்தின் இந்த தன்மையினாலே என்னால் ரன்களை குவிக்க முடிந்தது – வாட்சன் பேட்டி

Watson-1
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. இதனால் சென்னை அணிக்கு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Iyer

- Advertisement -

பிறகு ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 150 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் வாட்சன் 26 பந்துகளை சந்தித்து 44 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். மேலும், சென்னை அணியின் கேப்டன் தோனி 35 பந்துகளில் 32 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

போட்டிக்கு பிறகு பேசிய வாட்சன் கூறியதாவது : சென்னை மைதானத்தை விட இந்த மைதானத்தில் பந்து சற்று நின்று பொறுமையாக வந்தது. அதனாலே என்னால் துவக்கத்தில் அதிரடியாக ஆட முடிந்தது. நான் பவுலிங் செய்ய விரும்பவில்லை ஏனெனில், ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பேஷ் தொடரின்போது காலில் பிடிப்பு ஏற்பட்டது. அதனால் ஐ.பி.எல் போட்டிகளில் என்னுடைய பேட்டிங்கை மட்டுமே சிறப்பாக வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன்.

Watson

சென்னை அணி வீரர்களுடன் இணைந்து ஆடுவது மிகவும் மகிழ்ச்சியினை தருகிறது. கடந்த தொடரை போன்றே இந்த தொடரிலும் சிறப்பாக விளையாடுவோம் என்றும் வாட்சன் கூறினார். இன்று இரவு துவங்க உள்ள போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறுகிறது.

Advertisement