சி.எஸ்.கே அணியில் இந்த பேச்சுக்கே இடமில்லை. இதுதான் சி.எஸ்.கே அப்படினு தோனி என்கிட்ட சொன்னாரு – வாட்சன் பேட்டி

Watson
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 2008 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு என பல ஐ.பி.எல் அணிகளில் விளையாடி வந்தார். தற்போது சென்னை அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியில் துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.

Watson

கடந்த இரண்டு சீசன்களில் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சனுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் அவர்கள் வாட்சனை ஒரு ஹீரோவாகவே பார்க்கின்றனர். தற்போது இந்த தொடருக்காக வாட்சன் ஆஸ்திரேலியாவிலிருந்து ஏற்கனவே துபாய் சென்று அணி வீரர்களுடன் இணைந்துள்ளார். இந்நிலையில் தான் சிஎஸ்கே அணியுடன் இருந்து ஆடி அனுபவங்கள் குறித்து தற்போது அவர் சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது :

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி அதை நான் பெரிதும் விரும்பினேன். அது ஒரு மறக்க முடியாத அனுபவம் ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் விளையாடியது ஒரு ஆச்சரியமான அனுபவம். அதுவும் தோணி போன்ற ஒரு கேப்டனின் கீழ் விளையாடுவது என்பது வேறுவிதமான அனுபவம். இதை நான் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் ஆகத்தான் கருதுகிறேன் என்றார். மேலும் தொடர்ந்து பேசிய வாட்சன் கூறுகையில் :

Watson

2018 ஆம் ஆண்டு தொடரில் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியை என்னால் மறக்கவே முடியாது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நாங்கள் 84 ரன்கள் எடுக்கும் போதே 6 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அதன் பிறகு களமிறங்கிய பிராவோ 30 பந்துகளில் 68 ரன்களை விளாசினார். இறுதியில் பதட்டமான சூழ்நிலையில் காயமடைந்து இருந்த கேதர் ஜாதவ் அபாரமான ஒரு சிக்சரை விளாசி வெற்றிக்கு அழைத்து சென்றார்.

jadhav

அந்த போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றியும் பெற்றது. அப்போது எனது அருகே இருந்த துணை பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி மற்றும் தோனி ஆகியோர் வெற்றி கொண்டாட்டத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். அப்போது என்னுடன் பேசிய தோனி இதுதான் நம் சிஎஸ்கே நாம் இதை தான் செய்ய வேண்டும். எப்போதும் ஆட்டத்தை இழந்து விட்டோம் என்ற நிலை சிஎஸ்கே விற்கு எப்போதும் கிடையாது என்று தோனி தன்னிடம் கூறியதாக வாட்சன் நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement