ஐ.பி.எல் தொடரில் வீழ்த்தமுடியாத அணியாக இந்த அணியே திகழ்கிறது – வாட்சன் புகழாரம்

Watson

13வது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகரமாக கோப்பையை தட்டி தூக்கிவிட்டது. இந்த வருட ஐபிஎல் தொடர் பெரிதாக எந்த ஒரு பெரும் போட்டியும் இல்லாமல் அமைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரணிகள் ஈடு கொடுக்க முடியாமல் இருந்தது தான் உண்மை. எளிதாக இறுதிப்போட்டி வரை சென்று இறுதி போட்டியிலும் ஒன் சைடு போட்டியாக வெற்றிபெற்றது மும்பை அணி.

mi

அந்த அளவிற்கு அந்த அணி ஆக்ரோஷமாகவும் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக இருக்கிறது. இந்த கோப்பை அந்த அணிக்கு ஐந்தாவது கோப்பையாகும். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஒவ்வொரு அணியிலும் விளையாடிய வீரர்களின் செயல்பாடுகள் வீரர்களின் திறமைகள் புதிய வீரர்கள் பற்றி பேச்சுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஆக்ரோஷமாக வளர்ந்திருக்கிறது என்றும், அந்த அணியின் இளம் வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் சர்வதேச வீரர்கள் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெற வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

watson

இந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடர் குறித்து பேசிய சென்னை அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியதாவது… ஐந்தாவது முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள். சந்தேகமே இல்லாமல் மும்பை அணி தான் இந்த வருடத்தின் மிகச்சிறந்த அணி பலவீனமும் இல்லாத ஒரு அணியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

srh

அணியின் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்கள் என அனைவருமே தங்களது வேலையை மிகச் சிறப்பாக செய்து அணியை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். இந்த அணியை வீழ்த்துவது மிக மிக கடினம் என்று தெரிவித்திருக்கிறார் ஷேன் வாட்சன்.