தோனியுடன் பிளமிங் இருக்கும்வரை எப்போதும் சி.எஸ்.கே சாம்பியன் அணிதான் – வாட்சன் நெகிழ்ச்சி

Watson
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் சிஎஸ்கே அணி குறித்தும் தோனி மற்றும் பிளம்மிங் ஆகியோர் குறித்தும் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

watson

- Advertisement -

நான் என்னுடைய அனுபவத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி அது மிக அற்புதமானது மற்றும் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகும். சந்தேகமின்றி சொல்வேன் சிஎஸ்கே ஒரு சாம்பியன் அணிதான் ஏனெனில் தோனி சிஎஸ்கே அணியை வழிநடத்தும் விதம் மற்றும் பயிற்சியாளர் கேப்டனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பயிற்சி அளிக்கும் விதமும் உலகிலேயே சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த பயிற்சியாளர் இணை என்றால் அது தோனி ஃபிளமிங் இணை என்றே நான் கூறுவேன்.

அந்த அளவுக்கு சிறப்பாக அவர்கள் இருவரும் சிஎஸ்கே அணியை வழி நடத்துகிறார்கள். நான் வெளிநாடுகளில் பல தொடர்களை விளையாடி உள்ளேன். ஆனால் என் மனதில் எப்போதும் நீங்காத அணி என்றால் இது சிஎஸ்கே அணிதான். 2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே கோப்பையை வென்றது என்னால் மறக்கவே முடியாது.

watson

என்னைப்பொறுத்த வரை உலகின் சிறந்த கேப்டன் என்றால் தோனியைத்தான் கூறுவேன். ஏனெனில் அவர் இக்கட்டான சூழ்நிலையில் வீரர்களை அணுகும் விதம் மற்றும் போட்டியில் நிலையை சரியாக கணிப்பது என எந்த இடத்திலும் தனது நிதானத்தை இழக்கமால் இருக்கிறார். அதனாலே அவரால் தனியாக நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க முடிகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

Watson-1

மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் கூட எனக்கு என்னை நம்பி தொடர்ந்து வாய்ப்பு அளித்த அவர்கள் இருவருக்கும் நன்றி. அடுத்த வருடமும் நான் சிஎஸ்கே அணிக்காக விளையாட காத்திருக்கிறேன் என்னால் சிஎஸ்கே அணியை விட்டு விலகுவது என்பது கடினமான ஒன்று என்று நெகிழ்ச்சியுடன் வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement