- Advertisement -
உலக கிரிக்கெட்

அவரை பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. சுஷாந்த் மறைவு குறித்து வருத்தத்தை வெளிப்படுத்திய – ஆஸி வீரர்

பிரபல இளம் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியின் பயோபிக் படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார். மேலும் தோனியின் தீவிர ரசிகர்கள் அனைவரும் இவரை தோனியின் மறு உருவமாகவே பார்த்து வந்தனர். அந்த அளவிற்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியின் ரசிகர்கள் மத்தியில் பெரிய பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருக்கும் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து இன்னும் உண்மை காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் பிரபலங்கள் பலரும் அவரின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் கோலி, ரோகித் சர்மா, கம்பீர் மற்றும் சாஹல் என அனைவரும் சமூக வலைதளம் மூலமாக தங்களது இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இவரது மறைவிற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ஷேன் வாட்சன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதன்படி தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷாந்தின் புகைப்படத்தை பதிவிட்ட வாட்சன் அவரின் தற்கொலையை பற்றி நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. கிட்டத்தட்ட அவரை ரசிகர்கள் அனைவரும் தோனியாகவே பாவித்து வந்த நிலையில் அவரது இந்த முடிவு மிகவும் மனவேதனை அளித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வாட்சன் பதிவிட்டுள்ளார்.

இதுவரை இந்திய வீரர்கள் மட்டுமே அவரது மறைவிற்கு இரங்கலை தெரிவித்து வந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் வீரரான இவர் சுஷாந்தின் மறைவிற்கு பதிவிட்டுள்ள இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by