இவரின் ஸ்டம்பிங் வேகத்திற்கு இன்றளவும் யாரும் அவருக்கு ஈடு கிடையாது – வாட்சன் புகழாரம்

Watson 1
- Advertisement -

சென்னை அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் 2018 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் 57 பந்துகளில் 117 ரன்களை குவித்து சென்னை அணி கோப்பையை கைப்பற்ற உதவினார். அதேபோன்று 2019 ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியிலும் தனது காலில் அடிபட்ட பிறகு 59 பந்துகளில் 80 ரன்கள் அடித்து வெற்றிக்கு அருகில் வந்து ஆட்டம் இழந்து வெளியேறியதால் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை மயிரிழையில் தவறவிட்டது.

Watson2

அந்த அளவுக்கு தனது சிறப்பான ஆட்டத்தை சென்னைக்கு அளித்துவந்துள்ள வாட்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த ஓய்வு நேரத்தை நான் எனது குடும்பத்துடன் செலவு செய்தேன் மேலும் என்னுடைய கிரிக்கெட் இணைய தளத்தில் சில கிரிக்கெட் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்தேன்.

- Advertisement -

முன்னாள் வீரர்களுடன் நான் கண்ட நேர்காணல் வீடியோக்களை பதிவு செய்தேன். பல ஜாம்பவான்கள் உடன் நேர்காணல் செய்ததில் அவர்களது வாழ்க்கைமுறை மற்றும் பேட்டிங் நுணுக்கம், கிரிக்கெட் நுட்பம் ஆகியவற்றை தெளிவாக தெரிந்து கொண்டேன் என்று கூறினார். மேலும் ஐபிஎல் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் செயல்பாடு குறித்து பேசிய அவர் :

watson

மற்ற அணிகளை விட சென்னை அணிக்கு இம்முறை வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறலாம் ஏனெனில் எங்கள் அணியில் மூத்த வீரர்கள் மட்டும் என்று துடிப்பான இளம் இருந்து இருக்கிறார்கள். அது மட்டுமின்றி கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் ஆகியோர் சென்னை அணிக்கு கூடுதல் பலத்தை தருகின்றனர்.

- Advertisement -

தோனியிடம் என்ன குறை இருக்கிறது ? தோனி வயது, திறமை, துடிப்பான ஓட்டம் என அனைத்திலும் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கிறதா ? அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். அவரால் நிச்சயம் 40 வயதை கடந்தும் சிறப்பாக விளையாட முடியும். இம்முறையும் சி.எஸ்.கே அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்வார். தோனியின் ஸ்டம்பிங் வேகத்திற்கு இன்றளவும் யாரும் அவருக்கு ஈடு கிடையாது.

Watson

அவரின் மிகப்பெரிய ரசிகன். நான் மீண்டும் அவருடன் இணைந்து விளையாட காத்திருக்கிறேன் அது மட்டுமின்றி தோனி நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது ஆசை என்று கூறினார். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மைதானம் சாதகமாக இருக்கும் என்பதால் எங்கள் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல உதவுவார்கள் என்று வாட்ஸன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement