CSK vs MI : ரத்தம் வழிந்தபடி களத்தில் இருந்து போராடிய வாட்சன். காரணம் இதுதான் – ஹர்பஜன்

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்

Watson
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக வாட்சன் 80 ரன்களைக் குவித்தார். பும்ரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

malinga 1

இந்தப் போட்டி முடிந்தாலும் சிஎஸ்கே அணி இறுதியில் தோல்வி அடைந்தாலும் சென்னை அணியின் ரசிகர்கள் அவர்களை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக வாட்சன் விளையாடிய விதம் ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளது என்றே கூற வேண்டும். ஏனெனில் ஹர்பஜன்சிங் வாட்சன் எந்த நிலைமையில் இந்த விளையாட்டை ஆடினார் என்பது குறித்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Watson 1

அதன்படி வாட்சன் விளையாடிக் கொண்டிருக்கும்போது டைவ் அடித்து அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த காயத்தினை யாரிடமும் வெளியில் சொல்லாமல் ரத்தம் வர அவர் களத்தில் நின்ற படி சென்னையின் வெற்றிக்காக இறுதிவரை போராடினார். காயம்பட்ட அவர் வலியில் ஆடிக் கொண்டிருப்பது யாரிடமும் கூறவில்லை. காரணம் இது இறுதிப் போட்டி இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு பிறகு காயத்திற்கான முதல் உதவியை எடுத்துக் கொள்ளலாம் என்று கடைசிவரை விளையாடினார்.

watson 2

ஆனால் எதிர்பாராத விதமாக தன்னுடைய விக்கெட்டை இழந்து வாட்சன் வெளியேற சென்னை அணி பரிதாபமாக ஒரு ரன்னில் தோற்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறைக்கு சென்ற வாட்சன் கால் சட்டையில் ரத்தக்கறை இருந்தது பிறகு அடிபட்ட இடத்தில் ஆறுதல்கள் போடப்பட்டுள்ளதாக ஹர்பஜன் கூறினார்.

MI

இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் வாட்சனின் இந்த செயலைப் பாராட்டி சென்னை ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த தகவல் முழுவதும் உண்மைதானா என்ற என்னும் அளவிற்கு சென்னை அணி நிர்வாகத்திடம் இருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement