டி20 பார்மெட்டில் இந்த 5 பவுலர்கள் ஆபத்தானவர்கள். அதிலும் இந்திய வீரரான இவர் ரொம்ப டேஞ்சர் – வாட்சன் வெளிப்படை

Watson
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி துவக்க வீரர்களான ஷேன் வாட்சன் இந்த ஐ.பி.எல் தொடரின் ஆரம்பத்தில் நான்கு போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. இருப்பினும் தோனி அவர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகளை வழங்கினார். அதன்படி 5வது போட்டியில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் நின்று இறுதிவரை பேட்டிங் செய்து வெற்றி பெற்று கொடுத்தவர். அடுத்த போட்டியில் 50 ரன்கள் அடித்து அசத்தினார்.

- Advertisement -

தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள வாட்சன் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசும் டாப் 5 பவுலர்கள் குறித்த தனது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அண்மையில் அவரை பேட்டி கண்ட டி20 ஸ்டார்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் t20 பார்மட்டில் சிறப்பாகப் பந்துவீசும் 5 ஸ்பெஷல் பவுலர்களை அவர் தேர்வு செய்துள்ளார்.

அதில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா முதல் இடத்திலும், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஷாஹித் அப்ரிடியையும் இரண்டாவதாக தேர்வு செய்தார். அதன் பிறகு மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை அவர் தேர்வு செய்துள்ளார்.

Bumrah

யார்க்கர், வேகம், ஸ்விங் என அனைத்திலும் வெரைட்டியாக வீசுவார் என்பதால் அவரிடம் அசாத்திய திறமை உள்ளது. அவரை எதிர் கொண்டு விளையாடுவது சவாலான விடயம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு 26 வயது என்பது என்பதால் அவர் இன்னும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே தான் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

Bumrah-1

4வது இடத்தில் சிஎஸ்கே டீம் மேட்டான பிராவோவும், ஐந்தாவது இடத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனையும் அவர் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement