பிராவோ உடன் சேர்ந்து கரீபியன் ஸ்டைலில் நடனமாடிய சி.எஸ்.கே வீரர் – வீடியோ

Bravo
- Advertisement -

நேற்று நடந்த டெல்லி அணிக்கு ஏதிரான போட்டியில் சென்னை அணி வாட்சன் மற்றும் தோனி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் எளிதாக வெற்றி பெற்றது. போட்டிக்கு பிறகு வாட்சன் ஜாலியாக பிராவோ-யிடம் பேட்டி ஒன்றினை எடுத்தார். இந்த பேட்டியின் முடிவில் பிராவோ உடன் சேர்ந்து சில ஸ்டெப்ஸ் கரீபியன் ஸ்டைலில் வாட்சன் நடனமாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. இதனால் சென்னை அணிக்கு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பிறகு ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 150 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் வாட்சன் 26 பந்துகளை சந்தித்து 44 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். மேலும், சென்னை அணியின் கேப்டன் தோனி 35 பந்துகளில் 32 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

Advertisement