இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்களை பதிவிட்ட வாட்சன் – விவரம் இதோ

Watson
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் அவர் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுவதால் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் ஏராளம்.

- Advertisement -

இந்நிலையில் பிரபலங்களின் சமூகவலைதளங்கள் ஹேக் செய்யப் படுவது அடிக்கடி நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விடயம்தான். இந்நிலையில் தற்போது இந்த விடயத்தில் வாட்சனும் சிக்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்யப்பட்டுள்ளது.

அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் சில ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டு இருந்தது. இதுகுறித்து வாட்சன் விளக்கம் கொடுத்து மன்னிப்பும் ரசிகர்களிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது : எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட சட்டவிரோதமான புகைப்படங்கள் மற்றும் ஆபாச படங்களுக்கு நான் காரணமல்ல என்னை மன்னித்துவிடுங்கள்.

முதலில் எனது டுவிட்டர் கணக்கு வெள்ளிக்கிழமை அன்று ஹேக் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்கள் நடக்கும் போது நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் என இன்ஸ்டாகிராம் பக்கம் எப்போது மீட்கப்படும் என்று தெரியவில்லை. ஆனால் இதுபோன்ற விடயம் மீண்டும் நடக்காது என்னை மன்னியுங்கள் என்று வாட்சன் கூறினார்.

Advertisement