2 சிக்ஸரை அடித்து விட்டு பவுலரிடம் மன்னிப்பு கேட்ட வாட்சன் – காரணம் இதுதான்

Watson
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக நிவாரணம் திரட்டும் வகையில் ஆல்ஸ்டார் கிரிக்கெட் போட்டி ஒன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. அந்த போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும், பாண்டிங் தலைமையிலான அணியும் மோதின. சச்சின், லாரா, யுவராஜ் சிங், வாசிம் அக்ரம் என பல்வேறு ஜாம்பவான்கள் அந்த போட்டியில் பங்கேற்று விளையாடினர்.

Watson

அதில் பாண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக செயல்பட்டார். மேலும் ஆஸ்திரேலிய அணி மகளிர் வீராங்கனைக்கு எதிராக ஒரு ஓவர் பேட்டிங்கும் அவர் செய்தார். அந்த போட்டியில் பாண்டிங் அணி முதலில் பேட்டிங் செய்து 104 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய கில்கிறிஸ்ட் அணி சார்பில் விளையாடிய வாட்சன் அதிரடியாக ஆடினார்.

- Advertisement -

துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய வாட்சன் 9 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். அதில் மூன்று சிக்ஸர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். பாண்டிங் அணியில் ஆடிய வாசிம் அக்ரம் வீசிய ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை அடித்த வாட்சன் உலகின் தலைசிறந்த பவுலரான அக்ரமை வெளுத்துவிட்டார் என்று அன்றைய செய்திகளில் அந்த விடயம் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடுவதற்காக வாட்சன் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

akram

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில் : நான் அதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். வாசிம் அக்ரம் என் ஹீரோக்களில் ஒருவர் இப்போதும் அவர் ஒரு தரமான மனிதர். குறிப்பாக அந்த இரண்டாவது சிக்சரை அடித்த போது மிகவும் மோசமாக உணர்ந்தேன் அப்போது அக்ரமிடம் சென்று மன்னிப்பும் கேட்டேன் என்று வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement