Shane Watson : டி20 தொடரிலிருந்து ஓய்வு முடிவினை அறிவித்த வாட்சன் – ரசிகர்கள் அதிர்ச்சி

நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வியினால் சென்னை ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்திருக்கும்

watson
- Advertisement -

நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வியினால் சென்னை ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்திருக்கும் இந்நிலையில் மேலும், ஒரு அதிர்ச்சி தரும் விடயமாக வாட்சன் பிக் பேஷ் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவினை அறிவித்தார்.

Watson-1

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 தொடரான பிக் பேஷ் இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் போன்று அந்நாட்டின் பிரபலமான தொடராகும். பிக் பேஷ் தொடரில் சிட்னி தண்டர் அணிக்கு கடந்த 4 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு வந்த வாட்சன் தற்போது ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார். அவருடன் ஆடிய வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் தனது நன்றியினை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடவே அவர் ஓய்வு முடிவினை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். வாட்சன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சர்வதேச அணியில் இருந்து ஓய்வு முடிவினை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆஸ்திரேலிய சம்பந்தப்பட்ட அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் வாட்சன் தற்போது ஓய்வினை அறிவித்துள்ளார்.

Watson

இருப்பினும், ஐ.பி.எல் மற்றும் மற்ற வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் வாட்சன் பங்கேற்பார் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். இதனால் அடுத்த ஐ.பி.எல் திடரிலும் சென்னை அணிக்காக ஆடுவார் என்று உறுதியாகியுள்ளது.

Advertisement