தூத்துக்குடி வந்து தோனி வலைப்பயிற்சி மையத்தை திறந்து வைக்க இதுவே காரணம் – மனம் திறந்த வாட்சன்

Watson 1
- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஷேன் வாட்சன் கலந்துகொண்டார். பின்னர் அந்த பள்ளியில் தோனி வலைப்பயிற்சி மையத்தை அவர் திறந்து வைத்தார்.

Watson

அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு அவர்களது கேள்விக்கு பதிலும் அளித்தார். பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் : தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா வென்றது முக்கியமான நிகழ்வு. மேலும் அடுத்த தலைமுறைக்கான இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் தற்போது தயாராகிவிட்டனர் மேலும் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

தமிழகத்தில் டிஎன்பிஎல் போட்டி நடைபெறுவதை நான் சேப்பாக்கம் மைதானத்தில் பார்த்தேன். இதன் மூலம் ஏராளமான இளைஞர்களின் திறமை வெளிப்படுகிறது. இதனால் அவர்களுக்கு முன்னேறி வரும் வாய்ப்புகளும் கிடைக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய கங்குலி தேர்வாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் அவர் ஒரு திறமையான மற்றும் இளமையான நிர்வாகி என்று பேட்டியளித்தார்.

Watson

பின்னர் தான் தூத்துக்குடிக்கு வந்ததற்கும் தோனி பயிற்சி மையத்தை திறந்து வைத்திருக்கும் காரணத்தை அவர் கூறினார் அதன்படி : தமிழக மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பினை நான் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் போது அனுபவித்துள்ளேன். அவர்களின் இந்த எல்லையற்ற அன்பின் காரணமாகவே நான் அவ்வப்போது தமிழகம் வந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். தமிழக மக்கள் என்மீது காட்டும் அன்பிற்கு நன்றி என்று வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement