தோனியின் தலைமை பண்பு பற்றி வாட்சன் சொன்னது என்ன ?

dhoni
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியில் உள்ள கேப்டன் தான் . கேப்டனின் சரியான அணி நிர்வாகத்தை பொறுத்தே அந்த அணியின் வெற்றி நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் மஹிந்திர சிங் தோனி பல முறை தான் ஒரு வெற்றிகரமனா கேப்டன் என்று நிரூபித்துள்ளார்.

dhoni

- Advertisement -

தோனி குறித்து பல்வேறு கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் அவரது திறமையை பாராட்டி வருகின்றனர். தற்போது சென்னை அணியில் ஆடிவரும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்ஸன்தோனியின் செயல்திறனை கண்டு மிகுந்த ஆச்சர்யபட்டு அவரை பாராட்டியுள்ளார்.

தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெற முக்கிய காரணமே தோனியின் சிறப்பான தலைமை தான். கடந்த பஞ்சாப் எதிரான போட்டியில் கூட தோனி வித்யாசமாக செயல்பட்டு , யாரும் எதிர்பாராத விதமாக தனக்கு முன்னாள் ஹர்பஜனை களமிறக்கி, தனது தந்திரமான புத்தியை நிருபிரித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

Dhoni

இந்நிலையில் சென்னை அணியில் விளையாடி வரும் ஷேன் வாட்ஸன் கூறுகையில் “நான் தோனியின் தலைமயில் விளையிடுவதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். எனக்கு சென்னை அணியில் வாய்ப்பளித்தது போன்று வேறு எந்த அணியிலும் வாய்ப்பளிக்கவில்லை. போட்டி காலத்தில் அவர் சிந்திக்கும் விதமும், அவர் உள்ளனுர்வும் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கும்.” என்று தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement