சின்னப்புள்ள மாதிர – தெ.ஆ வீரரிடம் சஹால் செய்த சிரிக்க வைக்கும் காரியம், ரசிகர்கள் கலகல

CHahal Shamsi
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. உலக கோப்பைக்கு முன்பாக பங்கேற்றுள்ள இந்த கடைசி டி20 தொடரில் முதல் போட்டியில் அற்புதமாக பந்து வீசி தென் ஆப்பிரிக்காவை 106 ரன்களுக்கு சுருட்டி வென்ற இந்தியா கௌகாத்தியில் நடைபெற்ற 2வது போட்டியில் 237 ரன்களை நிர்ணயித்து போராடி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இந்த வெற்றியால் டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு தொடரில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியுள்ள இந்தியா அக்டோபர் 4ஆம் தேதியான இன்று நடைபெறும் கடைசி போட்டியில் வென்று ஒயிட் வாஷ் செய்ய களமிறங்குகிறது.

முன்னதாக கவுகாத்தியில் நடைபெற்ற இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானித்த 2வது போட்டி ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களை விருந்து படைத்தது என்றே கூறலாம். ஏனெனில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது யாருமே எதிர்பாராத வகையில் மைதானத்திற்குள் மிகப் பெரிய பாம்பு புகுந்து அட்டகாசம் செய்ததால் சுமார் 10 நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டது. அப்படி அழைக்காமலேயே வங்கதேச வீரர்கள் மைதானத்திற்குள் என்ன செய்கிறார்கள் என்று ரசிகர்கள் கிண்டலடித்த அந்த நிகழ்வு உலகம் முழுவதிலும் வைரலானது.

- Advertisement -

சின்னப்புள்ள தனமாக:
அதே போல் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்யும் போது மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்த ராட்சத மின்விளக்கு மின்சாரம் இல்லாமல் நின்று போனதால் மீண்டும் சுமார் 10 நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டது. அப்படி வேடிக்கையான காரணங்களுக்காக 2 முறை நிறுத்தப்பட்டு டேவிட் மில்லர் சதமடித்தது 237 ரன்களை வெறித்தனமாக துரத்தியதால் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் நட்சத்திர இந்திய வீரர் யுஸ்வென்ற சஹால் தனது பங்கிற்கு சற்று விளையாட்டுக் காட்டினார்.

ஆம் 237 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 0, ரோசவ் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே டக் அவுட்டானதால் 5/2 என மோசமான தொடக்கத்தை பெற்றது. அப்போது நிலைமையை எவ்வாறு சமாளித்து விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் சொல்லி அனுப்பிய செய்தியையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு மைதானத்துக்குள் வந்த தென்னாப்பிரிக்க சுழல் பந்து வீச்சாளர் தப்ரிஸ் சம்சி தமக்கு கொடுக்கப்பட்ட மெசேஜை மிகவும் தீவிரமாக மற்றொரு தொடக்க வீரர் குவின்டன் டி காக்’கிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

அப்போது இந்திய வீரர்களுக்காக இந்திய அணியின் சார்பில் செய்தியையும் தண்ணீர் பாட்டிலையும் கையுறைகளையும் கொண்டு வந்த சஹால் வந்த வேலையை செய்யாமல் நேராக தீவிரமாக பேசிக்கொண்டிருந்த சம்சியின் பின்புறத்தில் விளையாட்டுத்தனமாக முழங்காலால் இடித்து தள்ளினர். அதனால் ஒரு நொடி அதிர்ச்சியான சம்சி விளையாட்டாக நடந்து கொண்ட சஹால் மீது கோபம் கொள்ளாமல் நட்பை வெளிப்படுத்தினார். பள்ளி படிக்கும் போது அல்லது உள்ளூரில் விளையாடும் போது நண்பர்களுக்கிடையே செய்யும் இதுபோன்ற சேட்டைகளை சர்வதேச அளவில் அதுவும் எதிரணி வீரரிடம் அவர் செய்ததை பார்க்கும் இந்திய ரசிகர்கள் சிரித்து மகிழ்கிறார்கள்.

பொதுவாகவே இதுபோன்ற ஜாலியான சேட்டைகளை செய்யக்கூடிய குணத்தைப் பெற்றுள்ள சஹால் கடந்த 2019 உலக கோப்பையில் படுத்தவாறு கொடுத்த போஸ் உலக அளவில் இன்றும் பிரபலமாக உள்ளது. அந்த வகையில் இப்போட்டியிலும் அதே போன்ற சேட்டை செய்த அவர் உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக தேர்வானாலும் சமீபத்திய ஆசிய கோப்பையிலும் ஆஸ்திரேலியா டி20 தொடரிலும் சுமாராக பந்து வீசியதால் இந்த தென் ஆப்ரிக்க தொடரில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற தமிழக வீரர் அஷ்வின் அதை கச்சிதமாக பயன்படுத்திய செயல்பட்டு வருவதாலும் லோயர் ஆர்டரில் கணிசமான ரன்களைக் குவிக்கும் திறமை பெற்றுள்ளார். அதனால் பேட்டிங் பற்றி தெரியாமலும் பந்து வீச்சில் தடுமாற்றமாகவும் செயல்படும் சஹாலுக்கு உலக கோப்பை 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது.

இதையும் படிங்க : 3ஆவது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு – அணியில் செய்யப்பட்டுள்ள 3 மாற்றங்கள்

இருப்பினும் இந்த தொடர் போனாலும் உலக கோப்பைக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய இடத்தை பிடிப்பதற்கு அவர் போராட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement