இதே நானா இருந்தா அவுட் கொடுத்துருப்பிங்க தானே? சர்ச்சை அம்பயரை சமயம் பார்த்து நேராக கலாய்த்த கிங் கோலி

Nitin Menon Umpire
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. இருப்பினும் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா அதிரடியான வெற்றி பெற்று தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அதனால் பின்னடைவை சந்தித்த இந்தியா மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் வென்றால் தான் ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்று நிலைமைக்கு தள்ளப்பட்டது.

ஆனால் அப்போட்டியில் பிளாட்டான பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும் கேமரூன் கிரீன் 114 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் 6 விக்கெட்களை எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் 571 ரன்கள் குவித்து தக்க பதிலடி கொடுத்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 3 வருடங்கள் கழித்து சதமடித்து 186 ரன்களும் சுப்மன் கில் 128 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

கலாய்த்த கிங் கோலி:
ஆனால் அதற்குள் 4 நாட்கள் முடிந்து விட்டதால் 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 5வது நாளில் 175/2 ரன்கள் எடுத்திருந்த போது இப்போட்டி ட்ராவில் முடிந்தது. இருப்பினும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள 2வது அணியாக இந்தியா தகுதி பெற்றது. அதனால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் இப்போட்டியில் 186 ரன்கள் குவித்து அசத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ஏற்கனவே 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் சுமாரான பார்மில் தவித்த அவர் 2022 ஆசியக் கோப்பையில் டி20 கிரிக்கெட்டில் சதமடித்து சமீபத்திய வங்கதேசம் மற்றும் இலங்கை ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த சதங்களை விளாசிய போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் சதமடிக்காமல் இருந்து வந்தார். அதற்கு இத்தொடரில் முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அவர் டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் 44 ரன்கள் எடுத்து மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த போது எல்பிடபிள்யூ முறையில் ஆஸ்திரேலியா அவுட் கேட்டதால் இந்திய நடுவர் நிதின் மேனன் யோசிக்காமல் அவுட் கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் காலிலும் பேட்டிலும் ஒரே சமயத்தில் படும் போது பந்து முதலில் பேட்டில் படுவதாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அடிப்படை விதிமுறையாக இருக்கும் நிலையில் அதை மதிக்காமல் அவுட் கொடுத்த நிதின் மேனன் அதற்கடுத்த போட்டிகளிலும் விராட் கோலி அவுட்டாகும் சமயங்களில் அரைகுறை சந்தேகம் இருந்தாலும் அந்த சந்தேகத்தின் பலனை அவருக்கு கொடுக்காமல் கொஞ்சமும் யோசிக்காமல் அவுட் கொடுத்து வந்தது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதனால் கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் உட்பட பல தருணங்களில் குளறுபடியான முடிவுகளை கொடுத்து வரும் இந்த நடுவர் விராட் கோலிக்கு எதிராக வேண்டுமென்றே செயல்படுவதாக ரசிகர்கள் ஆதாரங்களுடன் விமர்சித்து வந்தனர்.

அந்த நிலையில் இப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் அஷ்வின் வீசிய 16வது ஓவரின் 4வது பந்தை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் அதை அடிக்காமல் தவற விட்டு காலில் வாங்கினார். அப்போது இந்திய அணியினர் அவுட் கேட்டும் அதே நிதின் மேனன் அவுட் கொடுக்கவில்லை. அதை எதிர்த்து இந்தியா டிஆர்எஸ் ரிவியூ எடுத்த போது பந்து ஸ்டம்ப்பில் லேசாக மட்டுமே உரசியதால் ஏற்கனவே களத்திலிருந்த நிதின் மேனன் கொடுத்த அவுட்டில்லை என்ற தீர்ப்பை மீண்டும் 3வது நடுவர் வழங்கினார்.

இதையும் படிங்க: IND vs AUS : கடந்த 10 வருஷத்தில் 2 இரண்டாவது முறை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக – அஷ்வின் நிகழ்த்திய சாதனை

அப்போது “இதுவே நானாக இருந்திருந்தால் அவுட் கொடுத்திருப்பீர்கள் தானே” என்று அருகில் இருந்த விராட் கோலி நேரடியாகவே சொல்லி நிதின் மேனனை கலாய்த்தார். அதற்கு கொஞ்சமும் வருத்தப்படாத நிதின் மேனன் சிரித்துக் கொண்டே கட்டை விரலை உயர்த்தி ஆம் என்று விராட் கோலிக்கு கொடுத்த பதில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement