IND vs AUS : கடந்த 10 வருஷத்தில் 2 இரண்டாவது முறை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக – அஷ்வின் நிகழ்த்திய சாதனை

Ashwin
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இன்று நடைபெற்ற ஐந்தாவது நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 480 ரன்களை குறிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 571 ரன்களை குவிந்திருந்தது.

IND vs AUS

பின்னர் 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்த போது இரு அணி கேப்டன்களும் போட்டியை டிரா செய்வதாக அறிவித்தனர்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த நான்காவது போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த தொடரின் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு இந்த தொடரின் தொடர் நாயகனாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அறிவிக்கப்பட்டனர்.

Ashwin-1

அஸ்வின் இந்த தொடரில் 25 விக்கெட் மற்றும் 86 ரன்கள் குவித்திருருந்தார். அதேபோன்று ஜடேஜா 22 விக்கெட்டுகளையும் 135 ரன்கள் குவித்திருந்ததாலும் அவரும் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். அதில் குறிப்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகளில் நடைபெற்ற தொடரில் அஸ்வின் தற்போது இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடர் நாயகன் விருதினை வென்றுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக தொடர் நாயகன் விருதினை வென்றுள்ளார். அந்த தொடரில் 29 விக்கெட்டுகள் மற்றும் 20 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதினை அவர் வென்றிருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இந்த தொடரிலும் அஷ்வின் ஆட்டநாயகன் விருதினை வென்று அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலியிடம் அந்த 2 ஸ்பெஷல் விஷயம் இருப்பதால் சச்சினை முந்தி 125 சதங்கள் அடிப்பாரு – ஹர்பஜன் சிங் ஓப்பன்டாக்

அதேபோன்று ஜடேஜாவும் கடந்த 2017-ஆம் ஆண்டு மற்றும் இந்த ஆண்டு அஸ்வினுடன் சேர்ந்து எடுத்த இந்த தொடர்நாயகன் விருதோடு இரண்டு முறை அவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடர்நாயகன் விருதினை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement