விராட் கோலியிடம் அந்த 2 ஸ்பெஷல் விஷயம் இருப்பதால் சச்சினை முந்தி 125 சதங்கள் அடிப்பாரு – ஹர்பஜன் சிங் ஓப்பன்டாக்

Harbhajan Singh
- Advertisement -

டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதரவுடன் குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக இந்திய பேட்டிங் துறையை தனது தோள் மீது 24 வருடங்கள் சுமந்து 30000க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி 100 சதங்களை அடித்து ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் அவரது இடத்தில் அவரைப் போலவே செயல்பட துவங்கிய விராட் கோலி இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷினாக உருவெடுத்தார்.

அப்போதிலிருந்து உலகின் அனைத்து நாடுகளிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 3 வகையான கிரிக்கெட்டிலும் 25000+ ரன்களையும் 75 சதங்களையும் அடித்துள்ள அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து 34 வயதிலேயே ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு சாம்பியனாக செயல்பட்டு வருகிறார். அப்படி ரன் மெஷினாக செயல்பட்டு வரும் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு 31 வயதிலேயே 70 சதங்களை அடித்திருந்ததால் எளிதாக சச்சினின் 100 சதங்கள் சாதனையை தூளாக்குவார் என்று அனைவரும் நம்பத் துவங்கினர்.

- Advertisement -

2 ஸ்பெஷல்:
ஆனால் பகலான இரவு வரும் என்ற இயற்கையின் நியதிக்கேற்ப 2019க்குப்பின் பார்மை இழந்து 2021 வரை சதமடிக்க முடியாமல் தடுமாறிய அவரை இந்திய அணியிலிருந்து நீக்குமாறு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் மனம் தளராமல் போராடிய அவர் 2022 ஆசிய கோப்பையில் 1020 நாட்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து பார்முக்கு திரும்பி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அபாரமான செயல்பட்டு சமீபத்திய வங்கதேசம் மற்றும் இலங்கை, ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த சதங்களை விளாசினார்.

அந்த நிலையில் அகமதாபாத் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 4வது போட்டியில் 1205 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதமடித்துள்ள அவர் தனது கேரியரில் அனைத்து பெரிய கண்டத்தை தாண்டி மீண்டும் பழைய விராட் கோலியாக செயல்பட துவங்கியுள்ளார். இதனால் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை அவரால் உடைக்க முடியுமா என்று எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 34 வயது மட்டும் நிரம்பியுள்ள விராட் கோலியிடம் வயது மற்றும் 24 வயதுடைய இளம் வீரருக்கு நிகரான ஃபிட்னஸ் இருப்பதால் நிச்சயமாக இன்னும் 50 சதங்களை அடித்து சச்சினின் சாதனை எளிதாக முறியடிக்க முடியும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்ருமாறு. “அதற்கு சாத்தியம் இருக்கிறது. அவர் 100 சதங்களுக்கும் மேல் அடிப்பார் என்று நினைக்கிறேன். இங்கே விராட் கோலிக்கு சாதகமாக அவருடைய வயது மற்றும் அவருடைய ஃபிட்னஸ் ஆகிய இரண்டும் இருக்கிறது. குறிப்பாக 24 வயதுடைய இளம் வீரருக்கு நிகரான ஃபிட்னஸ் அவரிடம் இருக்கிறது. அவர் அதில் மற்ற அனைவரையூன் விட முன்னிலையில் இருக்கிறார். எனவே ஏற்கனவே 75 சதங்கள் அடித்துள்ள அவர் இன்னும் குறைந்தது 50 சதங்கள் அடிப்பார். தன்னுடைய விளையாட்டை உணர்ந்துள்ள அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார்”

Harbhajan

“இதில் நான் சற்று அதிகமாக பேசுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது சாத்தியமாகும். இதை யாராவது செய்வார்களா என்றால் அது விராட் கோலியாக இருப்பார். தற்போதைய கிரிக்கெட்டில் சதங்களின் பட்டியலில் மற்ற வீரர்கள் அனைவரும் அவரை விட மிகவும் பின்தங்கியுள்ளனர். தன்னுடைய ஃபிட்னஸ் அம்சத்தில் எப்படி உழைக்க வேண்டும் என்பதை தெரிந்துள்ள அவருக்கு கடவுள் இயற்கையாகவே பேட்டிங் திறமையை கொடுத்துள்ளார். அவரிடம் டெக்னிக்கல் அளவில் எந்த தவறும் இல்லை. இருந்தாலும் அதை அவரால் சரி செய்ய முடியும். ஃபார்முக்கு திரும்பிய பின் ஏற்கனவே 5 சதங்களை அடித்து விட்டார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் சான்ஸ் கிடைக்க அந்த எக்ஸ்ட்ரா வேலை செய்ய தயாரா? கேஎல் ராகுலுக்கு டிகே முக்கிய அட்வைஸ்

அவர் கூறுவது போல விராட் கோலிக்கு அடுத்தப்படியாக ஜோ ரூட், டேவிட் வார்னர் ஆகியோர் 30 சதங்கள் குறைவாக 45 சதங்கள் அடித்துள்ளனர். எனவே சச்சினின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலியால் மட்டுமே உடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement