சிறுத்தையாக பாய்ந்து மாஸ் கேட்ச் பிடித்த கிங் கோலி.. 200 ரன்களை தொட விடாமல் ஆஸியை சுருட்டிய இந்தியா

Virat Kohli Catch
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியா 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது.

அதை தொடர்ந்து பேட்டிங்கை ஆஸ்திரேலியாவுக்கு பும்ரா வீசிய 3வது ஓவரிலேயே மிட்சேல் மார்ஷ் ஸ்விங் பந்தை சரியாக கணிக்காமல் எட்ஜ் கொடுத்த பந்தை விராட் கோலி சிறுத்தையைப் போல் சிரிப்பந்து துல்லியமாக பிடித்ததால் டக் அவுட்டாகி சென்றார். இருப்பினும் மறுபுறம் அசத்திய டேவிட் வார்னர் அடுத்ததாக வந்த ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது 41 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்தார்.

- Advertisement -

சுருட்டிய இந்தியா:
அந்த நிலைமையில் அடுத்ததாக ஜோடி சேர்ந்து 27 ஓவர்களை வரை நின்று சரிவை சரி செய்து சவாலை கொடுத்த ஸ்டீவ் ஸ்மித்தை 46 ரன்களில் கிளீன் போல்டாக்கிய ஜடேஜா அடுத்த ஓவரிலேயே மார்னஸ் லபுஸ்ஷேனை 27 ரன்களில் அவுட்டாக்கி அடுத்ததாக வந்த அலெக்ஸ் கேரியை டக் அவுட்டாக்கி போட்டியில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதனால் பின்னடைவுக்குள்ளான ஆஸ்திரேலியாவை நிதானமாக விளையாடி காப்பாற்ற முயற்சி மேக்ஸ்வெல் 15 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் சுழலில் போல்டானார்.

அந்த நிலையில் பொறுப்பை காட்ட வேண்டிய கேமரூன் கிரீன் 8 ரன்களில் தமிழக வீரர் அஸ்வின் சுழலில் சிக்கினார். அப்போது வந்த கேப்டன் கமின்ஸ் போராடி 15 ரன்களில் அவுட்டானதால் 165/8 என சரிந்த ஆஸ்திரேலியா 200 ரன்கள் தொடுமா என்ற கவலை அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டது.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் மிட்சேல் ஸ்டார்க் 28 (34) ரன்கள் எடுத்த போதிலும் 50 ஓவர்கள் இருக்க விடாத இந்திய பவுலர்கள் 49.3 ஓவரில் ஆஸ்திரேலியாவை 199 ரன்களுக்கு சுருட்டினர். அந்தளவுக்கு அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

அந்த வகையில் சுழலுக்கு சாதகமாக இருந்த சேப்பாக்கம் மைதானத்தை பயன்படுத்தி இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனாலும் 2வது இன்னிங்ஸில் பிட்ச் இன்னும் பேட்டிங்க்கு அதிக சவாலை கொடுக்கும் என்பதால் இந்தியா குறைந்த இலக்கையும் மிகவும் கவனத்துடன் சேசிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement