எப்போ தான் திருந்துவிங்க, பயிற்சி போட்டியிலும் அதே வேலையை செய்த விராட் கோலி – ரசிகர்கள் அதிருப்தி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வரும் ஜூலை 12ஆம் தேதி துவங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறைய விமர்சனங்களை எழுப்பியது. குறிப்பாக 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை போலவே 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்த ரோகித் சர்மாவுக்கு பதில் புதிய கேப்டன் தலைமையில் இளம் அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் வைத்தனர். இருப்பினும் அதை ஏற்காத தேர்வுக்குழு மீண்டும் அவரது தலைமையில் அறிவித்த அணியில் ரஞ்சி கோப்பையில் அசத்தும் சர்பராஸ் கானை தேர்ந்தெடுக்காதது விமர்சனங்களை உண்டாக்கியது.

அதை விட டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்த நிலையில் அதற்கான மொத்த பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விட்டதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். குறிப்பாக சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கில் பாலோயர்கள் இல்லாத காரணத்தால் யார் கேட்க போகிறார்கள் என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு முறையும் புஜாரா கழற்றி விடப்படுவதாக கவாஸ்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

திருந்தாக விராட் கோலி:
இந்நிலையில் அனைத்து விமர்சனங்களையும் தாண்டி டாமினிக்கா நகரில் நடைபெறப்போகும் முதல் போட்டிக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முன்பாக பயிற்சி போட்டிகள் எதுவும் இல்லாத காரணத்தால் அணிகளுக்குள்ளையே 2 குழுக்களாக பிரிந்து இந்திய அணியினர் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் ரோஹித் சர்மா – ஜெய்ஸ்வால் ஜோடி விளையாடி முடித்த பின் உணவு இடைவெளியில் இருந்து விராட் கோலி – சுப்மன் கில் ஆகியோர் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.

அப்போது ரவீந்திர ஜடேஜாவை சிறப்பாக எதிர் கொண்டு தன்னுடைய ஆட்டத்தை துவங்கிய விராட் கோலி அடுத்ததாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனட்கட் வீசிய பந்துகளில் பிளிக் ஷாட் அடித்து நல்ல துவக்கத்தை பெற்றார். அதனால் சவாலை கொடுப்பதற்காக அரௌண்ட் தி விக்கெட் திசையிலிருந்து வந்த உனட்கட் சற்று வெளியே 4வது ஸ்டம்ப் லைனில் பந்து வீசினார். அதை அடிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே தடவிய விராட் கோலி சரியான ஃபுட் ஒர்க் செய்யாமல் எட்ஜ் வாங்கி 2வது ஸ்லிப் ஃபீல்டரிடம் எளிதான கேட்ச் கொடுத்து (11.11 நிமிடத்தில்) தலையை தொங்கப் போட்டுக் கொண்டே வழக்கம் போல பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

கடந்த 2011இல் இதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு மிகவும் பிடித்த கவர் டிரைவ் அடிக்க விரும்பும் அவர் அவுட் சைட் ஆஃப் பகுதியில் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகளை வேண்டுமென்றே முன்னோக்கி சென்று எட்ஜ் கொடுத்து அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ளார்.

குறிப்பாக 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்விங் பந்துகளில் பெட்டி பாம்பாக அடங்கி கேரியரின் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி விமர்சனங்களை சந்தித்து அவரை அப்போதைய கேப்டன் தோனி ஆதரவு கொடுத்து காப்பாற்றினார். அதிலிருந்து முன்னேற்றத்தைக் கண்டாலும் 2019க்குப்பின் சதமடிக்காமல் தவித்த 3 வருட காலகட்டங்களில் பெரும்பாலும் அவர் அந்த ஷாட்டை அடித்தே அவுட்டானார். அதனால் 2004இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுமாரான ஃபார்மில் தவித்த போது கவர் ட்ரைவ் அடிக்காமலேயே 241* ரன்கள் விளாசி மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய சச்சினை பின்பற்றுமாறு அவருக்கு பெரும்பாலானவர்கள் ஆலோசனை கொடுத்தனர்.

இதையும் படிங்க:தல தோனியின் பிறந்தநாளை 2 மாநிலங்களில் மெகா கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் – எங்கே, எவ்வளவு உயரம் தெரியுமா?

ஆனால் அவற்றையெல்லாம் ஏற்காமல் தமது ஸ்டைலிலேயே விளையாடி 3 வருடங்கள் கழித்து சதமடித்த அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் அவுட்டாகி இந்தியாவை கைவிட்டார். அந்த நிலையில் இந்த பயிற்சி போட்டியிலும் அதே போல அவுட்டாகியுள்ள அவர் எப்போதும் திருந்த போவதில்லை என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement