தமிழக சரவெடி வீரருக்கு தலைவணங்கிய கிங் விராட் கோலி – இந்திய அணியில் இடம் கிடைக்குமா

Virat Kohli Bows Down To Dinesh Karthik
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் உச்சகட்ட பரபரப்புடன் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற பெரும்பாலான அணிகள் கடும் போட்டியிட்டு வருகின்றன. அந்த வகையில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட டுப்லஸ்ஸிஸ் தலைமையில் புத்துணர்ச்சியுடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 7 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. தற்போது நிலைமை எஞ்சிய 2 போட்டிகளில் தடுமாறாமல் வென்றாலே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நல்ல நிலைமையில் அந்த அணி உள்ளது.

RCB vs SRH Josh Hazelwood

- Advertisement -

பிளே ஆஃப் சுற்றுக்கான தேடலில் மே 8-ஆம் தேதி நடைபெற்ற 54-வது போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொண்ட அந்த அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 192/3 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 73* (50) ரன்களும் ரஜத் படிடார் 48 (38) ரன்களும் எடுக்க ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக ஜகதீசா சுசித் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

பெங்களூரு வெற்றி:
அதை தொடர்ந்து 193 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு அதன் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் ஆரம்பத்திலேயே அந்த அணியின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியான வேளையில் நடு வரிசையில் ராகுல் திரிப்பாதி அதிரடியாக 58 (37) ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழக்க ஐடன் மார்க்ரம் 21 (27) நிக்கோலஸ் பூரன் 19 (14) ஆகிய முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் தோல்வியை மேலும் உறுதி செய்தனர். இறுதிவரை 20 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டான அந்த அணி 11 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்து பிரகாசமாக இருந்த பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை குறைத்துக் கொண்டது.

RCB Faf Virat

பெங்களூரு சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கள் எடுத்து வணிந்து ஹசரங்கா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு நட்சத்திர வீரர் விராட் கோலி போட்டியின் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். ஏற்கனவே 2 வருடங்களாக சதமடிக்க முடியாமல் இந்த வருடம் அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டான அவர் இதன் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே சீசனில் 3 முறை கோல்டன் டக் அவுட்டாகி படுமோசமான பார்மில் திண்டாடுகிறார்.

- Advertisement -

சரவெடி கார்த்திக்:
அதனால் வழக்கம்போல கடும் ஏமாற்றத்துடன் பெவிலியனில் விரக்தியாக அவர் உட்கார்ந்திருந்த நிலையில் டு பிளேஸிஸ், கிளென் மேக்ஸ்வெல் போன்ற இதர நட்சத்திர வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்து பெங்களூருவை காப்பாற்றினார்கள். குறிப்பாக 18.2 ஓவரில் 159/3 என்ற ஓரளவு சுமாரான நிலையில் அந்த அணி இருந்தபோது கடைசி நேரத்தில் களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஒவ்வொரு பந்திலும் சரவெடியாக பேட்டிங் செய்தார். அதிலும் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட வெறும் 8 பந்தில் 1 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்ட அவர் 30* ரன்களை 375.00 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட் விகிதத்தில் விளாசி அபார ஃபினிஷிங் கொடுத்தார்.

Virat Kohli Dinesh Karthi RCB

அவரின் அந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த நிலையில் அதிருப்தியில் இருந்த விராட் கோலியும் அவரின் சரவெடியான பேட்டிங்கை பார்த்து மகிழ்ச்சியானார். குறிப்பாக 30 ரன்களை விளாசிய பின் பெவிலியனுக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக் ஆட்டத்தையும் திறமையையும் பார்த்து வியந்துபோன விராட் கோலி அவரை தலைவணங்கி அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இந்திய வாய்ப்பு:
முன்னதாக இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் பங்கேற்ற போட்டிகளில் முறையே 32*(14), 14*(7), 44*(23), 7*(2), 34(14), 6*(34), 13*(8), 0(3), 6(4), 2(3), 26*(17), 30*(8) என கடைசி நேரத்தில் களமிறங்கி 274* ரன்கள் 68.50 என்ற அபார பேட்டிங் சராசரியில் 200.00 என்ற தெறிக்கவிடும் ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார். அதிலும் அவர் களமிறங்கிய 12 போட்டிகளில் 8 முறை கடைசி வரை அவுட்டாகாமல் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துள்ளார்.

Dinesh Karthi 66

கடைசியாக கடந்த 2019இல் இந்தியாவிற்காக விளையாடிய அவர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற உயரிய லட்சியத்தில் ஒவ்வொரு போட்டியிலும் சொல்லி அடித்து வருகிறார். அப்படி 36 வயதானாலும் இந்திய அணியில் விளையாட தமக்கு தகுதி உள்ளது என்று நேற்றைய போட்டியில் மீண்டும் நிரூபித்துள்ள அவரை தேர்வு குழுவினர் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே வலுவாக எழுந்துள்ளது.

Advertisement