கிரிக்கெட்டை மறந்து ஜாலியாக குத்தாட்டம் போட்ட விராட் கோலி – இஷான் கிசான், 2 வைரல் வீடியோ உள்ளே

Ishan Kishan Virat Kohli Dance
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற நிலையில் அடுத்ததாக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவக்கியுள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த ஒருநாள் தொடரில் இந்திய பேட்டிங்கின் தூண்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முதல் போட்டியில் பெரிய ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி பார்முக்கு திரும்பினார்கள்.

அதே போல் 2வது போட்டியில் 86/4 என இந்திய தடுமாறிய போது மற்றொரு முக்கிய வீரர் கேஎல் ராகுல் நங்கூரமாக நின்று 64* (103) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்து ஓரளவு பார்முக்கு திரும்பியுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கையை 215 ரன்கள் மடக்கி பிடிக்கும் அளவுக்கு பந்து வீச்சில் அற்புதமாக செயல்பட்ட இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்த குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

போடு குத்தாட்டம்:
அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஹாட்ரிக் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது. ஏனெனில் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் இருந்த கதைக்கு 2022 ஆசிய கோப்பையில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அசத்திய அவர் கடைசியாக வங்கதேச மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதமடித்து அந்த வருடத்தை வெற்றியுடன் நிறைவு செய்தார்.

அதே வேகத்தில் இலங்கைக்கு எதிராக களமிறங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதமடித்து 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவங்கிய அவர் 2வது போட்டியில் 4 ரன்களில் அவுட்டாகி கொல்கத்தா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் பேட்டிங்கில் தவறினாலும் பீல்டிங் துறையில் அசத்தலாக செயல்பட்டு வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஓவர் மாற்றுவதற்கு இடையில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஒலிபரப்பப்பட்ட பிரபல பாலிவுட் பாடலுக்கு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை மகிழ வைத்தார்.

- Advertisement -

அவரது நடனத்தை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆரவாரம் செய்தனர். அதை விட இறுதியாக வென்ற இந்தியா தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியில் போட்டி முடிந்ததும் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஒலிபரப்பப்பட்ட மற்றொரு பிரபல பாலிவுட் பாடலுக்கு இளம் வீரர் இசான் கிசானுடன் சேர்ந்து மற்றுமொரு வெறித்தனமான குத்தாட்டத்தை விராட் கோலி போட்டார். வண்ண வண்ண ஒளி விளக்குகளால் ஜொலித்த ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்த விராட் கோலி கிரிக்கெட் பற்றிய டென்சன்களை மறந்து ஜாலியாக நடனமாடியது கொல்கத்தா ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடைய வைத்தது.

மொத்தத்தில் கிரிக்கெட்டை போலவே நடனத்திலும் அசத்தும் விராட் கோலியின் அந்த வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்ற அந்த போட்டியை முடித்துக் கொண்டு ஜனவரி 15ஆம் தேதியன்று நடைபெறும் 3வது மற்றும் கடைசி போட்டியில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் பயணித்துள்ளனர்.

இதையும் படிங்க: உங்களை விட அசத்தும் அவர் போதும், இந்தியாவுக்கு இனிமேல் நீங்க தேவையில்ல – கம்பீரின் விமர்சனத்துக்கு ஜடேஜா பதில்

தற்போது ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டதால் அந்த போட்டியில் தங்களுடைய கடைசி போட்டிகளில் முறையே சதம் மற்றும் இரட்டை சதங்களை அடித்த சூரியகுமார் யாதவ் மற்றும் இசான் கிசான் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் அந்த கடைசி போட்டியிலாவது வென்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க இலங்கை போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement