காயத்தால் தவிக்கும் பாக் வீரரை நலம் விசாரித்த இந்திய நட்சத்திர வீரர்கள் – பாக் ரசிகர்கள் நெகிழ்ச்சி

Shaheen Afridi Virat Kohli
- Advertisement -

வரலாற்றன் 15வது ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. அதன் கோப்பையை வெல்வதற்காக 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகவும் நடப்புச் சாம்பியனாகவும் திகழும் இந்தியா, 5 கோப்பைகளை வென்ற இலங்கை, 2 கோப்பைகளை வென்ற பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், குவைத் ஆகிய 6 அணிகள் போட்டி போட உள்ளன. இருப்பினும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு தான் உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய போது உலக கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் புதிய வரலாறு படைத்தது.

அதனால் தலை குனிந்த இந்தியா இம்முறை தக்க பதிலடி கொடுக்க ரோகித் சர்மா தலைமையில் துபாய்க்குச் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதனால் இப்போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில் கடந்த முறை வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இம்முறை காயத்தால் இந்த ஆசிய கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளார். அதன் காரணமாக ரோகித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் இந்தியாவும் தப்பித்து விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கிண்டலடித்து விடுகிறார்கள்.

- Advertisement -

தரமான ஷாஹீன்:
சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடரின்போது முழங்கால் காயத்தை சந்தித்த அவர் கடந்த சில வருடங்களாகவே 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக பந்துவீசி குறுகிய காலத்திலேயே பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். கடந்த முறை இந்தியாவை தோற்கடித்து ஆட்டநாயகன் விருது வென்றது போல் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் ஸ்விங், வேகம், பவுன்ஸ் போன்ற அம்சங்களால் கேஎல் ராகுல் போன்ற தரமான பேட்ஸ்மேன்களையும் திணறடிக்கும் உலகத்தரம் வாய்ந்த பவுலராக தன்னை நிரூபித்து வருகிறார்.

அதனால் ஐசிசியின் 2021 சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை வென்று சாதனை படைத்துள்ள அவர் இந்த தொடரில் விலகியுள்ளது உண்மையாகவே பாகிஸ்தானுக்கு பின்னடைவாகும். இருப்பினும் அவரது அனுபவம் இதர பந்துவீச்சாளர்களுக்கு பயன்படும் என்பதற்காக காயத்தை சந்தித்தாலும் அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்து கேப்டன் பாபர் அசாம் தங்கள் அணியுடன் அழைத்து வந்துள்ளார்.

- Advertisement -

நலம் விசாரிப்பு:
இந்த நிலைமையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இடைவெளி இருப்பதால் இரு அணி வீரர்களும் துபாயில் தீவிரமான வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்கத்து பக்கத்து ஐசிசி அகடமி மைதானத்தில் பயிற்சி எடுத்து வரும் இவர்கள் பயிற்சிக்கு செல்லும்போதும் முடித்து விட்டு திரும்பும் போதும் ஒருவருக்கு ஒருவரை சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் நேற்றைய தங்களது பயிற்சியை துவங்க மைதானத்துக்கு சென்ற இந்திய வீரர்கள் காயத்தால் முழங்காலில் ஸ்டிக் போட்டுக்கொண்டு பரிதாபமாக ஓரத்தில் அமர்ந்திருந்த சாஹீன் அப்ரிடியை பார்த்து எதிரணி என்பதையும் மறந்து நலம் விசாரித்தார்கள்.

குறிப்பாக இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வென்ற சஹால் சிரித்த முகத்துடன் ஒருசில நிமிடங்கள் ஜாலியாக பேசி அவருடைய காயத்தின் நிலைமை பற்றி கேட்டறிந்தார். அடுத்ததாக இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலியும் அவருடன் கை கொடுத்து காயத்தை பற்றி கேட்டறிந்ததுடன் அதிலிருந்து விரைவில் குணமடைய சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

- Advertisement -

மேலும் நீங்கள் விரைவில் பார்முக்கு திரும்பி ரன்கள் அடிக்க இறைவனை வேண்டிக் கொள்வதாக சாஹீன் அப்ரிடி கூறியது இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டது. அதேபோல் “வேகப்பந்து வீச்சாளர்கள் வாழ்வில் இதெல்லாம் சகஜம் என்பதால் சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள்” என்ற வகையில் ரிஷப் பண்ட் தனக்கே உரித்தான பாணியில் நலம் விசாரித்தார்.

இறுதியாக காயத்திலிருந்து குணமடைந்தது சமீபத்தில் அணியில் இணைந்துள்ள கேஎல் ராகுல் மிகவும் தீவிரமாக அவரது காயத்தை பற்றி கேட்டறிந்தார். இப்படி பரம எதிரிகள் என்பதையும் தாண்டி நல்ல மனம் கொண்ட மனிதர்களாக, காயத்தின் வலியை பற்றி தெரிந்த கிரிக்கெட் வீரர்களாக ஷாஹீன் அப்ரிடியிடம் இந்திய வீரர்கள் முழு அன்பை வெளிப்படுத்தி பாசத்துடன் நலம் விசாரித்ததை பார்த்த பாகிஸ்தான் மனமுருகி சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : சச்சின், கங்குலி, டிராவிட், லக்ஷ்மன் அகியோரது வளர்ச்சியின் புகழ் அவரைதான் சேரும் – முன்னாள் பாக் வீரர் கருத்து

மேலும் நாம்தான் சமூக வலைதளங்களில் சண்டையிட்டுக் கொள்கிறோம். ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரிகள் கிடையாது எப்போதுமே சிறந்த நண்பர்கள் என்பதை மீண்டும் இந்த கிரிக்கெட் வீரர்கள் நிரூபித்து விட்டதாக சில ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது இரு நாடுகளிலும் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement