சச்சின், கங்குலி, டிராவிட், லக்ஷ்மன் அகியோரது வளர்ச்சியின் புகழ் அவரைதான் சேரும் – முன்னாள் பாக் வீரர் கருத்து

Sachin Tendulkar Rahul Dravid VVS Laxman Sourav ganguly Sehwag
Advertisement

ஆரம்ப காலங்களில் கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியான திகழ்ந்த இந்தியா 1983இல் கபில் தேவ் தலைமையில் யாருமே எதிர்பாராத வகையில் வலுவான வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து முதல் முறையாக உலக கோப்பையை வென்றபோது மிகப்பெரிய மறுமலர்ச்சி கண்டது. கிரிக்கெட் என்றால் என்ன என்ற எண்ணத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்திய அந்த சரித்திர வெற்றி சச்சின் டெண்டுல்கர் போன்ற நிறைய இளம் வீரர்களை தங்களது கையில் பேட்டையும் பந்தையும் எடுக்க வைத்து நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது. அந்த வகையில் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் கேப்டனாக செயல்பட்ட முகமது அசாருதீன் 90களில் நீண்ட காலம் இந்தியாவை வழி நடத்தினார்.

Mohammed Azharuddin Sachin tendulkar

1992, 1996, 1999 என 3 உலகக் கோப்பைகளில் இந்தியாவை வழிநடத்திய அவர் உலக கோப்பையை வெல்ல விட்டாலும் அந்த காலகட்டத்தில் 2 ஆசிய கோப்பை உட்பட நிறைய முக்கிய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். அதேபோல் 21ஆம் நூற்றாண்டில் இந்தியா கிரிக்கெட்டை ஆள தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்த சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மண் போன்ற ஜாம்பவான்கள் அவரது தலைமையில் தான் அறிமுகமாகி அவருடைய ஆதரவுடன் நாளடைவில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக உருவெடுத்தனர். அதே போல் 1989இல் கிரிஸ் ஸ்ரீகாந்த் தலைமையில் 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான சச்சின் டெண்டுல்கரும் இவரது தலைமையில் தான் வளர தொடங்கி நாளடைவில் ஜாம்பவானுகெல்லாம் ஜாம்பவனாக உருவெடுத்தார்.

- Advertisement -

தரமான அசாருதீன்:
குறிப்பாக ஆரம்ப காலங்களில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் ரன்கள் குவிக்க தடுமாறிய சச்சினின் திறமையை உணர்ந்து தொடக்க வீரராக களமிறக்கும் முடிவை அசாருதீன் தான் எடுத்தார். அப்போது முதலில் உலகின் அனைத்து அணிகளையும் பந்தாடிய சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் 18,000+ ரன்களையும் 49 சதங்களையும் முதல் முறையாக இரட்டை சதமும் அடித்து ஏராளமான சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தார்.

Azharuddin

அதேபோல் இரட்டை குழல் துப்பாக்கிகளாக கடந்த 1996இல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசாருதீன் தலைமையில் அறிமுகமான சௌரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் நாளடைவில் இந்தியாவின் முதுகெலும்பு பேட்ஸ்மேன்களாகவும் கேப்டன்களாகவும் உருவாகி ஏராளமான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தனர். மேலும் 1996இல் சச்சின் தலைமையில் அறிமுகமான விவிஎஸ் லக்ஷ்மன் அசாருதீன் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி நாளடைவில் உலகை அதிரவைத்த ஆஸ்திரேலியாவையே அலறவிடும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக வலம் வந்தார்.

- Advertisement -

அசாருதீனுக்கு பாராட்டுக்கள்:
மொத்தத்தில் இந்த தரமான வீரர்களின் வளர்ச்சியில் முன்னாள் கேப்டன் அசாருதீன் பங்கு உண்மையாகவே அளப்பரியதாக இருந்தது என்றே கூறலாம். இருப்பினும் கேரியரின் இறுதியில் சூதாட்ட புகாரில் சிக்கியதால் அவருக்கு ஏற்பட்ட கெட்ட பெயர் இந்த அனைத்து புகழையும் பாராட்டுகளையும் மறைத்துவிட்டது. ஆனாலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலைமையில் சசின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற ஜாம்பவான்களை உருவாக்கிய பாராட்டுகளை தாராளமாக அவருக்கு வழங்கலாம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் பாராட்டியுள்ளார்.

latif

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் (சச்சின்) மிடில் ஆர்டரில் இருந்து டாப் ஆர்டருக்கு வந்தபின் நிறுத்தாமல் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டே இருந்தார். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வருவதற்கு முன் மிடில் ஆர்டரில் அவர் ஆரம்பத்திலேயே கிட்டத்தட்ட 70 போட்டிகளுக்கு மேல் விளையாடி தடுமாறிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

அதிலும் 1989 – 1990இல் அறிமுகமான அவர் தனது முதல் சதத்தை 1994இல் தான் அடித்தார். அந்த வகையில் அதற்கான நிறைய பாராட்டுகள் முகமது அசாருதீனை சேர வேண்டும்” “அத்துடன் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய 4 – 5 தரத்திலும் தரமான இந்திய வீரர்கள் உருவானதற்கான பாராட்டுகளை பெறுவதற்கு அசாருதீன் தகுதியானவர்.

Azharuddin

அதில் சச்சின் டெண்டுல்கர் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர். டான் பிராட்மேன், விவ் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங் மற்றும் ஜாக் காலிஸ் ஆகியோர் காலத்தால் அழியாத மகத்தானவர்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் இனியாரும் தொட முடியாத புதிய வரலாறு படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன் – குவியும் வாழ்த்துக்கள்

சௌரவ் கங்குலி, தோனி வருவதற்கு முன்பாக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இந்திய கேப்டனாக சாதனை படைத்திருந்த முகமது அசாருதீன் வரலாற்றில் 3 உலகக் கோப்பைகளில் இந்தியாவை வழிநடத்திய ஒரே கேப்டனாக இன்றும் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement