வீடியோ : நியூஸிலாந்தை ஏமாற்ற பாகிஸ்தான் செய்த வேலையா? அம்பயர்களிடம் சிக்கிய பரிதாபம், நடந்தது என்ன

- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அங்கு 5 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை மழைக்கு மத்தியில் முதலிரண்டு போட்டிகளில் தோற்றாலும் பின்னர் கொதித்தெழுந்த நியூஸிலாந்து 2 – 2 (5) என்ற கணத்தில் சமன் செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டது. குறிப்பாக 2வது தர அணி என்று விமர்சித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு டாம் லாதம் தலைமையிலான இளம் நியூசிலாந்து அணி செயலால் தக்க பதிலடி கொடுத்தது. மேலும் கடந்த வருடம் சொந்த மண்ணில் ஒரு தொடரை கூட வெல்லாத பாகிஸ்தான் இத்தொடரிலும் தோற்றதால் வழக்கம் போல ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளானது.

அதைத்தொடர்ந்து இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் முதல் போட்டியில் போராடி வென்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் 2வது போட்டி ஏப்ரல் 29ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு ராவல்பிண்டி நகரில் துவங்கியது அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

சிக்கிய பாகிஸ்தான்:
அதை தொடர்ந்து நியூசிலாந்து பேட்டிங் செய்ய களமிறங்கி முதல் ஓவரை விக்கெட் எதுவும் விடாமல் எதிர்கொண்டு முடித்தது. அப்போது வழக்கத்திற்கு மாறாக மைதானத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்த நடுவர்கள் இருவரும் உடனடியாக போட்டியை நிறுத்தி விட்டு பேசினார்கள். குறிப்பாக பிட்ச்சை சுற்றியிருக்கும் 30 யார்ட் உள்வட்டத்தின் அளவு அதிகமாக இருப்பதாக உணர்ந்த அவர்கள் ஒருவருக்கொருவர் அதைப் பேசி உறுதி செய்தனர். அதை தொடர்ந்து சரியான தூரத்தை அளந்து உள்வட்டத்தை குறிக்கும் வட்ட வடிவிலான வெள்ளை துண்டுகளை 2 நடுவர்களும் பாகிஸ்தான் வீரர்களை வைத்தே சரியான இடத்தில் போட வைத்தனர்.

100 வருடங்களுக்கு முன்பாக துவங்கப்பட்ட கிரிக்கெட்டில் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பவுண்டர்களின் எல்லை மாற்றப்பட்டாலும் 30 யார்ட் உள்வட்டம் மட்டும் இன்னும் மாறாமலேயே இருந்து வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்த நிலையில் இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்வை பார்த்ததில்லை என்று வியப்பை வெளிப்படுத்திய வர்னணையாளர்கள் இதை யார் செய்திருப்பார் என்று நேரலையில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மற்றொரு வர்னணையாளர் நிச்சயமாக நாம் இருவரும் செய்யவில்லை என்று கலகலப்பாக தெரிவித்தார்.

- Advertisement -

இருப்பினும் இப்போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதால் பாகிஸ்தான் அணியினர் தான் ராவல்பிண்டி மைதான பராமரிப்பாளர்களை வைத்து இப்படி உள்வட்டத்தின் அளவை பெரிதாக மாற்றியமைத்ததாக நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக உள் வட்டத்தின் அளவை இப்படி பெரிதாக மாற்றினால் பவர் பிளே ஓவர்களில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பவுண்டரிகளை பறக்க விட முயற்சிக்கும் போது கேட்ச் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு ஏற்படும்.

அந்த வகையில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை ஏமாற்றுவதற்காகவே பாகிஸ்தான் அணியினர் இந்த வேலையை செய்ததாகவும் நல்ல வேலையாக ஆரம்பத்திலேயே அதை நடுவர்கள் கண்டறிந்து உடைத்ததாகவும் ரசிகர்கள் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள். அத்துடன் வரலாற்றில் பலமுறை சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அணியினரிடம் இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் மைதான பரிமாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் தவறாக 30 யார்டை அளந்திருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் அணியினர் இதில் எந்த தலையிடும் செய்யவில்லை என்றும் அந்நாட்டு ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியில் அந்த இளம்வீரரை தோனி ரொம்ப சூப்பரா யூஸ் பண்றாரு – முரளி கார்த்திக் பாராட்டு

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2023 ஆசிய கோப்பையை தங்களது நாட்டில் நடத்தியே தீருவோம் என்று பாகிஸ்தான் வாரியம் கடந்த சில மாதங்களாகவே இந்தியாவுடன் மல்லு கட்டி வருகிறது. ஏற்கனவே அங்கு பாதுகாப்பு அம்சங்கள் திருப்தியளிக்கும் வகையில் இல்லாத நிலைமையில் தற்போது மைதானத்தின் 30 யார்ட் உள் வட்டத்தின் அளவு மாற்றும் வேலை நடைபெற்றுள்ளதால் நிச்சயமாக பாகிஸ்தானில் ஆசிய கோப்பையை நடத்தக் கூடாது என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கிறார்கள்.

Advertisement