சி.எஸ்.கே அணியில் அந்த இளம்வீரரை தோனி ரொம்ப சூப்பரா யூஸ் பண்றாரு – முரளி கார்த்திக் பாராட்டு

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 202 ரன்கள் எடுத்தது. பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்தியது.

CSK vs RR

- Advertisement -

அப்படி கடினமான இலக்கை துரத்திய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே குவித்ததால் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் சென்னை அணி இன்னும் புள்ளி பட்டியலில் நல்ல இடத்தில் தான் இருக்கிறது.

இந்நிலையில் இந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனியின் சில யுக்திகளை முரளி கார்த்திக் பாராட்டி பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றம்தான் என்னை பொறுத்தவரை தற்போது தேவை என்று நினைக்கிறேன். அந்த வகையில் சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்ஷனாவிற்கு பதிலாக மிச்சல் சான்ட்னரை களமிறக்கினால் போதும்.

Matheesha Pathirana

அது தவிர சென்னை அணியில் பதிரானா மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இளம் வேகப்பந்து வீச்சாளரான அவரை தோனி மிகச் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக பதிரானாவை ரிமோட் கண்ட்ரோல் போன்று பயன்படுத்துகிறார். சென்னை அணிக்காக எப்போது அவரது பங்களிப்பு தேவையோ அப்போது அவரை பந்துவீச தோனி அழைக்கிறார்.

- Advertisement -

அதேபோன்று தோனி நினைக்கும் படியே பதிரானாவும் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். எனவே பதிரானாவை அணியிலிருந்து மாற்ற வேண்டாம். மகேஷ் தீக்சனாவிற்கு பதிலாக சான்ட்னரை அணிக்குள் கொண்டு வந்தால் இன்னும் பலமாக இருக்கும் என்று முரளி கார்த்திக் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சென்னை சூப்பர் கிங்சில் தற்போது வேகப்பந்துவீச்சு சற்று மோசமாக உள்ளது.

இதையும் படிங்க : IPL 2023 : இவரோட கேப்டன்சி தோனி போலவே இருக்கு. அவங்க டீமோட ஸ்ட்ரென்த்தே அவர்தான் – கவாஸ்கர் புகழாரம்

ஆகாஷ் தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அவரது பந்துவீச்சில் ரன்கள் கசிகிறது அதேபோன்று ஒட்டுமொத்தமாகவே பவுலிங் சற்று அதிக அளவில் ரன்கள் கசிவது மட்டுமே அவர்களது பாதகமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இது போன்ற போட்டிகளை தோனி வித்தியாசமாக பார்ப்பார் என்றும் முரளி கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement