ஹெலிகாப்டர் சிக்ஸர் விளாசி தோனியின் சாதனை சமன் – மும்பையை தனி ஒருவனாக தாங்கிய வருங்கால ஸ்டார் திலக் வர்மா

Tilak Varma
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று நடைபெற்ற 2 போட்டிகளில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர்கொண்டது. புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு தடவலாக செயல்பட்ட இசான் கிசான் 10 (13) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேமரூன் கிரீன் 5 (4) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதை விட மறுபுறம் தடவிய கேப்டன் ரோகித் சர்மாவும் 1 (10) ரன்னில் அவுட்டான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவும் 15 (16) ரன்களில் ஆட்டமிழந்து பெரிய பின்னடைவை கொடுத்தார்.

அதனால் 48/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று திண்டாடிய மும்பைக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த நேஹல் வாதரே – திலக் வர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி மீட்டெடுக்க போராடினார்கள். அதில் 1 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு மிரட்டிய வாதரே 101 சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலேயே 21 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் அசத்திய திலக் வர்மா அரை சதமடித்து போராடிய போதிலும் எதிர்ப்புறம் டிம் டேவிட் 4, ரித்திக் ஷாக்கீன் 5 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

தனி ஒருவன் திலக்:
ஆனால் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த திலக் வர்மா பெங்களூருக்கு சிம்ம சொப்பனமாக மாறி 9 பவுண்டரி 4 சிக்சருடன் 84* (46) ரன்கள் விளாசி காப்பாற்றினார். அவருடன் அரஷ்சத் கான் 15* (9) ரன்கள் எடுத்ததால் தப்பிய மும்பை 20 ஓவர்களில் 171/7 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கரண்ட் சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தார். குறிப்பாக ஹர்ஷல் படேல் வீசிய 20வது ஓவரின் கடைசி பந்தில் முன்னாள் கேப்டன் தோனி இடது கை பேட்ஸ்மேனாக விளையாடினால் எப்படி இருக்குமோ அதே போல ஹெலிகாப்டர் சிக்ஸர் பறக்க விட்ட திலக் வர்மா சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

மொத்தத்தில் 171 ரன்களில் இதர மும்பை பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 76 ரன்கள் எடுக்க (எக்ஸ்ட்ரா 11 ரன்கள்) திலக் வர்மா மட்டும் தனி ஒருவனாக 84 ரன்கள் விளாசினார். அத்துடன் 5வது இடத்தில் களமிறங்கி 84* ரன்கள் விளாசிய அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்கு எதிராக 5வது இடத்தில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த 3வது பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையும் சமன் செய்தார். அந்த பட்டியல்:
1. டேவிட் மில்லர் : 101*
2. நிதிஷ் ராணா : 95*
3. எம்எஸ் தோனி/திலக் வர்மா : தலா 84*

- Advertisement -

ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த அவர் கடந்த வருடம் மும்பை அணிக்காக அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய நிலையில் இந்த வருடமும் முதல் போட்டியிலேயே அபாரமாக செயல்பட்டு தன்னை வருங்கால சூப்பர் ஸ்டாராக அடையாளப்படுத்தியுள்ளது ரசிகர்களை பாராட்ட வைக்கிறது.

அதை தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்களூருக்கு ஆரம்ப முதலே விராட் கோலியுடன் இணைந்து சரவெடியாக விளையாடி ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட மும்பை பவுலர்களை தெறிக்க விட்டு 148 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 6 சிக்சருடன் 73 (43) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்.

இதையும் படிங்க:IPL 2023 :வழக்கம்போலவே முதல் போட்டியில் சொதப்பிய மும்பை இந்தியன்ஸ் – என்ன நடந்தது?

இறுதியில் தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானாலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 6 பவுண்டரி 5 சிக்சருடன் 82* (59) ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் 12* (3) ரன்களும் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 16.3 ஓவரிலேயே 172/3 ரன்கள் எடுத்த பெங்களூரு 8 விக்கெட் அபார வெற்றி பெற்றது.

Advertisement