தம்முடைய கேரியரின் கடைசி பந்தில் சிக்ஸர் பறக்க விட்டு ஃபினிஷிங் செய்த ஸ்டுவர்ட் ப்ராட் – வாழ்த்திய யுவ்ராஜ் சிங்

Stuart Broad 3
- Advertisement -

அனல் பறந்து வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணத்தில் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் கோப்பையை தக்க வைத்து அசத்தியுள்ளது. அதனால் இத்தொடரில் தோல்வியை தவிர்க்க ஜூலை 27ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து ஹரி ப்ரூக் 85 ரன்கள் குவித்த உதவியுடன் 282 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்ந்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்த உதவியுடன் 295 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதன் பின் 12 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் ஜோ ரூட் 91 ரன்கள் எடுத்த உதவியுடன் 395 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 384 ரன்களை துரத்தும் ஆஸ்திரேலியா 4வது நாள் உணவு இடைவெளியில் 75/0 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

யுவ்ராஜ் சிங்கின் உத்வேகம்:
முன்னதாக இப்போட்டியின் 3வது நாள் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். கடந்த 2006இல் அறிமுகமான அவர் 2007 டி20 உலக கோப்பையில் ஆண்ட்ரூ ஃபிளிண்டாப் வம்பிழுத்ததற்கு பலிகாடாக இந்தியாவின் யுவராஜ் சிங்கிடம் ஒரே ஓவரில் 6 சிக்சர்களைக் கொடுத்து மோசமான விமர்சனங்களை சந்தித்தார்.

இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் 2010 டி20 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் முக்கிய பங்காற்றிய நிலையில் நாளடைவில் சுமாராக செயல்பட்டதால் 2016க்குப்பின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பை இழந்தார். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்திய அவர் 165 போட்டிகளில் 602* விக்கெட்களை சாய்த்து உலகிலேயே அதிக விக்கெட்களை எடுத்த 2வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

அப்படி ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தாலும் தன்னம்பிக்கையுடன் போராடினால் வெற்றி காணலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் அவர் 37 வயதில் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படும் ஆஷஸ் தொடரில் தம்முடைய கடைசி ரன் மற்றும் விக்கெட் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்தார். அதனால் உலகம் முழுவதிலும் இருக்கும் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த நிலையில் இன்று துவங்கிய 4வது நாள் ஆட்டத்தில் 2* ரன்களுடன் களத்தில் இருந்த அவரை ஆஸ்திரேலிய வீரர்கள் இருபுறத்திலும் நின்று கைதட்டி வரவேற்க மைதானத்தில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து அந்த பாராட்டுகளை ஏற்ற பிராட் தம்முடைய பார்ட்னரான ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் கடைசி முறையாக பேட்டிங் செய்வதற்காக களமிறங்கினார். அந்த தருணத்தைப் பார்த்து தம்முடைய கண்கள் கலங்குவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுஸைன் நேரலையில் பாராட்டினார்.

- Advertisement -

அந்த பாராட்டுக்கு மத்தியில் மிட்சேல் ஸ்டார்க் வீசிய 81வது ஓவரின் கடைசி பவுன்சர் பந்தை எதிர்கொண்ட அவர் சிக்ஸர் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். ஆனால் அடுத்த ஓவரிலேயே ஆண்டர்சன் 8 ரன்களில் அவுட்டானதால் மேற்கொண்டு பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறாத பிராட் தம்முடைய கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தம்முடைய கடைசி இன்னிங்க்ஸில் 8* ரன்களில் நாட் அவுட்டாக பெவிலியன் திரும்பினார்.

அப்படி யுவராஜ் சிங்கிடம் சிக்ஸர்களை கொடுத்ததால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட ப்ராட் தமது கேரியரை சிக்சருடன் முடித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. மேலும் மொத்தமாக 845 சர்வதேச விக்கெட்களை எடுத்து ஜாம்பவானாக விடைபெறும் அவரை யுவ்ராஜ் சிங் ட்விட்டரில் மனதார வாழ்த்தியது பின்வருமாறு.

இதையும் படிங்க:சுப்மன் கில்லை இப்போதே விராட் கோலியுடன் ஒப்பிடுவது தவறு. ரசிகர்கள் விமர்சனம் – விவரம் இதோ

“தலை வணங்குகிறேன் ஸ்டுவர்ட் ப்ராட். நம்ப முடியாத டெஸ்ட் கேரியருக்கு வாழ்த்துக்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் பயத்தை ஏற்படுத்தும் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவரான நீங்கள் உண்மையான லெஜெண்ட். உங்கள் பயணமும் உறுதியும் ஊக்கமளிக்கிறது. அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

Advertisement