வீடியோ : ஹேய் எப்புட்றா, ஒரே பந்தில் 16 ரன்களை விளாசிய ஸ்டீவ் ஸ்மித் – இந்தியாவை அச்சுறுத்தும் பார்மில் வெறித்தன பேட்டிங்

Steve Smith BBL 66
Advertisement

ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பிக்பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2022/23 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜனவரி 23ஆம் தேதியன்று நடைபெற்ற 53வது லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் ஆகிய அணிகள் மோதின. ப்ளட்ன்ஸ்டோன் ஏரியானா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய சிட்னி அணிக்கு 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் ஒருபுறம் தடவலாக செயல்பட்டு திணறிய ஜோஸ் பிலிப் 8 (16) ரன்களில் ஆட்டமிழந்தார்.

Steve SMith BBL 2

அந்தளவுக்கு எதிர்ப்புறம் ரன்களை அதிரடியாக தெறிக்க விட்ட ஸ்டீவ் ஸ்மித் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 66 (33) ரன்களை 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அவுட்டானார். அவருக்கு பின் மிடில் ஆர்டரில் பேட்டர்சன் 18, ஹெய்டன் கெர் 2, டேன் கிறிஸ்டின் 8, ஜோர்டான் சில்க் 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். கேப்டன் இருப்பினும் கடைசி நேரத்தில் மொய்சஸ் ஹென்றிக்ஸ் 23* (16) துவார்சுய்ஸ் 30 (14) சீன் அபோட் 14* (7) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை அதிரடியாக எடுத்து 20 ஓவரில் 180/7 ரன்கள் சேர்க்க உதவினர். ஹோபார்ட் சார்பில் அதிகபட்சமாக பட்ரிக் டூலி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ஒரே பந்தில் 16:
அதைத்தொடர்ந்து 181 ரன்களை துரத்திய ஹோபார்ட் ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்களை குவிக்க தவறியதுடன் விக்கெட்டுகளையும் இழந்து 20 ஓவர்களில் 156/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக ஜாக் க்ராவ்லி 49 (45) ரன்கள் மட்டுமே எடுதார். அதனால் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிட்னி லீக் சுற்றின் முடிவில் 10 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக இந்த போட்டியில் ஜோயல் பாரிஸ் வீசிய 2வது ஓவரின் 3வது பந்தில் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியான சிக்சரை பறக்க விட்டார்.

ஆனால் அது நோ-பால் என்பதால் வழக்கம் போல நடுவர் பிரீ ஹிட் கொடுத்த நிலையில் அடுத்த பந்தை ஒழுங்காக வீச வேண்டியது அவர் கட்டுப்பாட்டை இழந்து லெக் சைட் திசையில் விக்கெட் கீப்பர் பிடிக்க முடியாத அளவுக்கு வீசி பவுண்டரி கொடுத்தார். அதனால் பிரீ ஹிட் நிலுவையில் இருந்த அடுத்த பந்தில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அதிரடியான பவுண்டரியை பறக்க விட்டார். அந்த வகையில் பவுலர் செய்த தவறுடன் ஒரே ஒரு பந்தில் 6, 4 பைஸ், 4, 2 நோ-பால் என மொத்தம் 16 ரன்களை தனது அணிக்கு சேர்த்த ஸ்டீவ் ஸ்மித் வெறும் 22 பந்துகளில் 50 ரன்களை கடந்து டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய அதிவேகமான அரை சதத்தையும் பதிவு செய்தார்.

- Advertisement -

முன்னதாக இதற்கு முந்தைய 2 போட்டிகளில் சிக்ஸருடன் சதங்களை அடித்த அவர் பிக்பேஷ் லீக் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்து அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருதுகளையும் வென்றார். தற்போது இப்போட்டியிலும் 66 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றுள்ள அவர் ஹாட்ரிக் ஆட்டநாயகன் விருதுகளை வென்று தாம் வெறும் டெஸ்ட் வீரர் அல்ல என்பதையும் டி20 கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும் என்பதையும் நிரூபித்து எதிரணிகளை மிரட்டி வருகிறார்.

Steve Smith Virat Kohli IND vs AUS

இதையும் படிங்க: IND vs NZ : இலங்கை அணிக்கு நடந்தது தான் உங்களுக்கும் நடக்கப்போகுது – நியூசிலாந்து அணிக்கு இப்படி ஒரு நிலையா?

அதிலும் குறிப்பாக வரும் பிப்ரவரி 9ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் துவங்கும் இந்த நேரத்தில் அவர் முரட்டுத்தனமான பார்மில் இருப்பது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகவும் இந்திய ரசிகர்களுக்கு கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் கடைசியாக கடந்த 2017 இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தாறுமாறாக சுழன்ற புனே மைதானத்தில் அவர் மட்டும் தான் சதமடித்து இந்தியா சந்தித்த ஒரே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement