IND vs NZ : இலங்கை அணிக்கு நடந்தது தான் உங்களுக்கும் நடக்கப்போகுது – நியூசிலாந்து அணிக்கு இப்படி ஒரு நிலையா?

Umran-Malik
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணியானது ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் (2-0) இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.

IND-vs-NZ

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட் வாஷ் செய்யும் என்ற ஆர்வத்துடன் இந்திய அணி காத்திருக்கிறது.

- Advertisement -

தற்போது உள்ள அணியில் சுப்மன் கில், விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் என பேட்டிங்கில் மிக பலம் வாய்ந்து இருக்கும் இந்திய அணி அதே சமயத்தில் பந்து வீச்சிலும் முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ் என அனைவருமே அற்புதமாக செயல்பட்டு வருகிறார்கள்.

Mohammed Shami

அதே வேளையில் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்களான கேன் வில்லியம்சன், ட்ரென்ட் போல்ட், டிம் சவுதி போன்ற வீரர்கள் இல்லாமல் அந்த அணி பெரிய தடுமாற்றத்தை கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் அந்த அணி 108 ரன்களுக்கு எல்லாம் சுருண்டு பரிதாப நிலையை எட்டியது.

- Advertisement -

இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் இந்த மூன்றாவது போட்டியிலும் நிச்சயம் நியூசிலாந்து அணி தோல்வியை சந்திக்கும் என தற்போதே ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த தொடருக்கு முன்னதாக இலங்கை அணியும் இந்திய அணி வாஷ் அவுட் செய்து தொடரினை கைப்பற்றியது. அதே நிலைமைதான் உங்களுக்கும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : உலகிலேயே அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களுக்கு இடம் – ஐசிசி வெளியிட்ட 2022ஆம் ஆண்டின் சிறந்த கனவு டி20 அணி இதோ

நிச்சயம் இந்திய அணி நாளைய போட்டியிலும் நியூசிலாந்து அணியை எளிதாக வீழ்த்தி தொடரை கைப்பற்றும் என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணிக்கு இப்படி ஒரு நிலையா? என்றும் சில ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement