உலகிலேயே அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களுக்கு இடம் – ஐசிசி வெளியிட்ட 2022ஆம் ஆண்டின் சிறந்த கனவு டி20 அணி இதோ

- Advertisement -

உலகம் முழுவதிலும் 2023 புத்தாண்டு கோலாகலமாக பிறந்துள்ள நிலையில் கடந்த 2022 காலண்டர் வருடத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் முக்கிய வருடமாக அமைந்தது என்றே கூறலாம். ஏனெனில் உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலக கோப்பை கடந்த அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அதே போல் ஆசிய கண்டத்தின் டி20 சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை வரலாற்றில் 15வது முறையாக கடந்த அக்டோபர் மாதம் துபாயில் நடைபெற்றது. அந்த 2 தொடர்களிலும் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் வழக்கம் போல லீக் சுற்றில் அசத்திய இந்தியா நாக் அவுட் சுற்றில் பரிதாபமாக தோற்று வெறும் கையுடன் வெளியேறியது. இருப்பினும் அந்த 2 தொடர்களிலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியின் ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. ஏனெனில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு எழுந்த விமர்சனங்களை ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்து அடித்து நொறுக்கிய அவர் அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் அதிக ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

ஐசிசி கனவு அணி:
அதிலும் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக 160 ரன்களை துரத்துகையில் 31/4 என சரிந்த போது வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி 82* ரன்கள் குவித்து மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் தற்போது பழைய பார்முக்கு திரும்பி அசத்தி வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக சொல்லப்போனால் அவரையே மிஞ்சும் வகையில் எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் பெரும்பாலான போட்டிகளில் அடித்து நொறுக்கிய சூரியகுமார் யாதவ் 2022 காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் (1164) குவித்த வீரராக உலக சாதனை படைத்து தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் பேட்ஸ்மேனாகவும் முன்னேறினார்.

அதே போல் கதை முடிந்ததாக கருதப்பட்டாலும் 2022 ஐபிஎல் கோப்பையை வென்று மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பரம எதிரி பாகிஸ்தானை தோற்கடிக்க முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் 2022 சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்ட கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் உலகிலேயே அதிகபட்சமாக இந்த 3 வீரர்களும் இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அந்த அணியில் சந்தேகமின்றி 2022 டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதே போல் ஆல் ரவுண்டராக செயல்பட்டு தொடர் நாயகன் மற்றும் பைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற சாம் கரன் முக்கிய வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் பாகிஸ்தான் அணியிலிருந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் இடம் பிடித்துள்ளனர். நியூசிலாந்து அணியிலிருந்து இலங்கைக்கு எதிராக முக்கிய போட்டியில் சதமடித்து அசத்திய கிளன் பிலிப்ஸ் தேர்வாகியுள்ளார்.

மேலும் இலங்கையிலிருந்து சுழல் பந்து வீச்சாளர் வணிந்து ஹசராங்காவும் ஜிம்பாப்வே அணியிலிருந்து பாகிஸ்தானை டி20 உலக கோப்பையில் 1 ரன்னில் தோற்கடிக்க முக்கிய பங்காற்றிய சிக்கந்தர் ராசாவும் தேர்வாகியுள்ளார். இந்த அணியில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் எந்த வீரரும் இடம் பெறாத நிலையில் அயர்லாந்தின் ஜோஸ் லிட்டில் தேர்வாகி அந்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதையும் படிங்க: ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் விராட் கோலி சதமடித்த 4 தருணங்கள்

2022 ஐசிசி கனவு டி20 அணி இதோ: ஜோஸ் பட்லர் (கேப்டன்/கீப்பர் – இங்கிலாந்து), முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), விராட் கோலி (இந்தியா), சூரியகுமார் யாதவ் (இந்தியா), கிளன் பிலிப்ஸ் (நியூஸிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஹர்திக் பாண்டியா (இந்தியா), ஷாம் கரண் (இங்கிலாந்து), வணிந்து ஹசரங்கா (இலங்கை), ஹாரீஸ் ரவூப் (பாகிஸ்தான்), ஜோஸ் லிட்டில் (அயர்லாந்து)

Advertisement