கடந்த சனிக்கிழமை ஹைட்ரபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தனது பழைய பிலே ஆப் வாய்ப்பை கைப்பற்றிக்கொண்டது கொல்கத்தா அணி. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி ஓ19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது
Bhuvneshwar Kumar runouthttps://t.co/HaqpFLwdYF
— Faizal Khan (@faizalkhanm9) May 19, 2018
காயம் காரணமாக ஹைதராபாத் அணியில் சில போட்டிகளில் பங்குபெறாத புவனேஸ்வர் குமார் இந்த போட்டியில் பங்குபெற்றார். ஹைதராபாத் அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது கடைசி ஓவரை வீசிய கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர் ப்ரஸி கிருஷ்ணா கடைசி ஒவேரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் அவர் வீசிய கடைசி பந்தை புவனேஸ்வர் குமார் எதிர்கொண்ட போது அது கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் தஞ்சம் புகுந்தது. பின்னர் புவனேஸ்வர் குமார் எப்படி வேடிக்கையாக ரன் அவுட்டானார் என்பதை நீங்களே இந்த வீடியோ பதிவில் பாருங்கள்.