கோபமான பாபர் அசாம் – நேர்மையாக விளையாடாத ஆப்கானிஸ்தானுக்கு கைகொடுக்காமல் புறக்கணித்த நட்சத்திர வீரர்

Pakistan 2
- Advertisement -

இலங்கை மண்ணில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் உச்சகட்ட விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் தங்களை 201 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தானை 59 ரன்களுக்கு சுருட்டி மெகா வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2வது போட்டியிலும் வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. மறுபுறம் 2 போட்டிகளிலுமே கடுமையாக போராடி ஆப்கானிஸ்தான் முக்கிய நேரங்களில் சொதப்பி தலைகுனியும் தோல்விகளை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

முன்னதாக நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் 151, இம்ராஹிம் ஜாட்ரான் 80 என தொடக்க வீரர்களின் நல்ல ரன் குவிப்பால் 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 300/5 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாஹின் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 301 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பகார் ஜமான் 30, இமாம்-உல்-ஹக், கேப்டன் பாபர் அசாம் 53 என ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்தனர்.

- Advertisement -

கைகொடுக்காத அப்ரிடி:
ஆனால் மிடில் ஆர்டரில் முகமது ரிஸ்வான் 2, சல்மான் ஆஹா 14, உஸ்மான் மிர் 0, இப்திகார் அகமது 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 8 விக்கெட்டுகள் சரிந்த நிலைமையில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய சடாப் கான் 48 (35) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடிய போதிலும் கடைசி ஓவரின் முதல் பந்தை வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார். அதை சரியாக கவனித்த பவுலர் ஃபரூக்கி மன்கட் முறையில் ரன் அவுட்டாக்கியதால் போட்டியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் அடுத்ததாக வந்த நசீம் ஷா 10* (5) ரன்கள் அடித்து பாகிஸ்தானுக்கு த்ரில் பெற்றுக் கொடுத்தார். அப்போது பெவிலியிலிருந்து ஓடி வந்த பாகிஸ்தான் வீரர்கள் வெறித்தனமாக கொண்டாடிய நாசீமை கட்டிப்பிடித்து பாராட்டி மீண்டும் பெவிலியன் நோக்கி நடந்தனர். அந்த சமயத்தில் நட்சத்திர வீரர் ஷாஹின் அப்ரிடி “மன்கட் செய்து வெற்றியை படிக்க முயற்சித்த ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்க வேண்டாம்” என்ற வகையில் தங்களுடைய வீரர்களிடம் சைகை காட்டி பெவிலியனை நோக்கி அழைத்தார்.

- Advertisement -

மேலும் களத்தில் நடந்து ஏதோ ஒரு விஷயத்தை பற்றி ஷாஹின் அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் கேப்டன் பாபர் அசாமிடம் புகார் சொன்னார்கள். அதைத்தொடர்ந்து இரு அணி வீரர்களும் வழக்கம் போல கை கொடுத்துக் கொள்ளும் நிகழ்வு நடந்த போது ஷாஹின் அப்ரிடி ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்காமல் நேரடியாக பெவிலியனுக்கு சென்று விட்டார். இருப்பினும் இதர வீரர்கள் கை கொடுத்த நிலைமையில் முதல் ஆளாக கை கொடுத்துக்கொண்டே சென்ற கேப்டன் பாபர் அசாம் ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபியிடம் சென்ற போது கையை நீட்டி ஏதோ கோபமாக பேசினார்.

இதையும் படிங்க:ஆசிய கோப்பை 2023 : மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சினின் ஆல் டைம் சாதனையை உடைக்கப் போகும் ஹிட்மேன் ரோஹித் சர்மா

அப்படி பரபரப்பாக நடைபெற்று முடிந்த இந்த தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் ஏற்கனவே தொடரை இழந்தாலும் குறைந்தபட்சம் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்த்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement