வீடியோ : முதல் பந்தில் ஹரிஸ் பேட்டை உடைத்து 2வது பந்தில் பாபர் அசாம் ஸ்டம்பை தெறிக்க விட்ட ஷாஹீன் அப்ரிடி

- Advertisement -

பாகிஸ்தானின் பிரபல பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் அந்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 26ஆம் தேதியான நேற்று லாகூரில் நடைபெற்ற 15வது லீக் போட்டியில் லாகூர் மற்றும் பெசாவர் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற லாகூர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 241/3 ரன்கள் விளாசியது. அந்த அணிக்கு தாஹிர் பைக் 5 ரன்னில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அப்துல்லா சபிக் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 75 (41) ரன்கள் குவித்து அவுட்டானார்.

அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய பகார் ஜமான் அடுத்து வந்த சாம் பில்லிங்ஸ் உடன் கை கோர்த்து 3வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரிகளையும் 10 இமாலய சிக்சர்களையும் பறக்க விட்டு 96 (45) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு விட்டனர். இறுதியில் சாம் பில்லிங்ஸ் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 47* (23) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்தார். அந்தளவுக்கு மோசமாக பந்து வீசிய பெஷாவர் சார்பில் அதிகபட்சமாக வகாப் ரியாஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

தெறிக்கவிட்ட ஷாஹீன்:
அதை தொடர்ந்து 242 ரன்களை துரத்திய பெஷாவர் அணிக்கு களமிறங்கிய முகமது ஹாரிஸ் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் பந்தை எதிர்கொண்டார். 137 கி.மீ வேகத்தில் மட்டுமே வந்தாலும் சிறப்பாக ஸ்விங் ஆகி வந்த அந்த பந்தை தவறான கோணத்தில் பேட்டை கையில் பிடித்து முகமது ஹாரிஸ் எதிர்கொண்டார். அதனால் அந்த வேகத்துக்கு அவரது பேட் இரண்டாக உடைந்தது அவரையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

அப்படி முதல் பந்திலேயே பயத்தை காட்டிய ஷாஹீன் அப்ரிடி 2வது பந்தை 140 கி.மீ வேகத்தில் ஸ்விங் கலந்த யார்கர் பந்தாக வீசி முகமத் ஹாரீஸை க்ளீன் போல்ட்டாக்கி அவருடைய ஆஃப் ஸ்டம்ப்பை தெறிக்க விட்டார். அதனால் 0/1 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற தனது அணியை மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் நல்ல லைன், லென்த் ஆகியவற்றுடன் அதிரடியான வேகத்தில் 3வது ஓவரின் 5வது பந்தை வீசிய ஷாஹீன் அப்ரிடி அவரது மிடில் ஸ்டம்ப்பை பறக்க விட்டு க்ளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

அதனால் 28/2 என மேலும் தடுமாறிய பெஷாவர் அணிக்கு மிடில் ஆர்டரில் கோளர்-கேட்மோர் 55 (23) சைம் ஆயுப் 51 (34) என ஒரு சில வீரர்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட்டதால் 20 ஓவர்களில் கடுமையாக போராடியும் 201/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் காரணமாக 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற லாகூர் அணிக்கு அதிகபட்சமாக 4 ஓவரில் 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த கேப்டன் ஷாஹீன் அப்ரிடி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதே போல புதிய பந்தை ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக செயல்படக்கூடிய ஷாஹீன் அப்ரிடி 2021 டி20 உலக கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்தது யாராலும் மறக்க முடியாது.

இதையும் படிங்க:வீடியோ : ராஸ் டெய்லரை முந்திய கேன் வில்லியம்சன் புதிய வரலாற்று சாதனை – இங்கிலாந்தை சாய்க்க போராடும் நியூஸிலாந்து

மேலும் கடந்த பிஎஸ்எல் தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் கேப்டனாக லாகூர் அணிக்கு கோப்பையும் வென்று படுத்த அவர் கடந்த வருட ஆசிய கோப்பைக்கு முன்பாக காயமடைந்து சமீப காலங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது முழுமையாக குணமடைந்து மீண்டும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவது பாகிஸ்தான் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்து வரும் தொடர்களில் பாகிஸ்தான் அணிக்காகவும் அவர் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement