உலகமே அழிந்தாலும் இது மாறாது, வித்யாசமாக காயமடைந்த பாக் வீரர்களை கலாய்க்கும் ரசிகர்கள் வீடியோ உள்ளே

Pakistan Players
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2022 ஆசிய கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி செப்டம்பர் 11ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. அதில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பைனலில் மோதிய நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 170/6 ரன்கள் சேர்த்தது. நிஷாங்கா 8, குஷால் மெண்டிஸ் 0, டீ சில்வா 28, குணத்திலகா 1, கேப்டன் சனாகா 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணி 58/5 என ஆரம்பத்திலேயே திணறியது.

ஆனால் 6வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஹசரங்கா 5 பவுண்டரி 1 சிக்சருடன் 36 (21) ரன்கள் எடுக்க அவருடன் அட்டகாசமாக பேட்டிங் செய்த ராஜபக்சா 6 பவுண்டரி 3 சிக்சருடன் 71* (45) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். அதை தொடர்ந்து 171 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 5 (6), பக்கார் ஜமான் 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

- Advertisement -

சொதப்பிய பாகிஸ்தான்:
அதனால் 22/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அணிக்கு 3வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற முயன்ற இப்திகர் அஹமத் 32 (31) ரன்களும் அவருடன் முடிந்தளவுக்கு போராடிய தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 55 (49) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது போராடினால் கிடைத்திருக்க வேண்டிய வெற்றியை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பி கோட்டை விட்டனர்.

ஏனெனில் துபாயில் டாஸ் வென்று சேசிங் செய்தால் 99% வெற்றி உறுதி என்ற நிலைமையில் சொதப்பிய அந்த அணி 20 ஓவர்களில் 147 ரன்களுக்கு சுருண்டது. அந்தளவுக்கு தரமாக பந்து வீசிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசன் 4 விக்கெட்டுகளும் ஹசரங்கா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை 2022 ஆசிய கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

உலகமே அழிந்தாலும்:
சமீப காலங்களில் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறிய இலங்கை தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடுவதால் இந்த தொடரில் கோப்பையை வெல்லாது என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் இளம் வீரர்களை வைத்து அற்புதமாக விளையாடிய அந்த அணி இந்தியா உட்பட அனைத்து வலுவான அணிகளையும் தோற்கடித்து பாகிஸ்தானையும் பைனலில் தோற்கடித்து 6வது ஆசிய கோப்பையை வென்று பாராட்டுகளை அள்ளி வருகிறது.

மறுபுறம் தாமாக தேடி வந்த டாஸ் அதிர்ஷ்டத்தை வீணாக்கும் வகையில் செயல்பட்ட பாகிஸ்தான் இலங்கையை விட தரவரிசையில் மேல்புறத்தில் இருந்தும் பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டிருந்தும் சொதப்பியது. முன்னதாக நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதல் 10 ஓவர்களில் மிரட்டிய பாகிஸ்தானை கடைசி 10 ஓவர்களில் இலங்கை மிரட்டியது. குறிப்பாக 71* ரன்களைக் குவித்த ராஜபக்சா முகமத் ஹஸ்னைன் வீசிய 19வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்றார்.

- Advertisement -

ஆனால் தேவையான தூரம் பறக்காத அந்த பந்து மிட் விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த ஆசிப் அலியிடம் சென்றது. அவரும் அதை கச்சிதமாக பிடிக்க கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த போது உள்ளே புகுந்த மற்றொரு பாகிஸ்தான் வீரர் சடாப் கான் அவர் மீது மோதி கேட்ச்சை பிடிக்க விடாமல் கெடுத்தது மட்டுமல்லாமல் அவரையும் காயப்படுத்தி தன்னையும் காயப்படுத்திக் கொண்டார்.

அதைவிட அந்த மோதலின் போது அவர்களது கையில் இருந்த பந்து பறந்து போய் சிக்ஸராக பவுண்டரி எல்லையை தாண்டி விழுந்ததால் இலங்கைக்கு 6 ரன்கள் கிடைத்தது. மறுபுறம் பீல்டிங்கில் எளிதாக தடுத்திருக்க வேண்டிய பந்தை சிக்ஸருக்கு அனுப்பி வைத்து 6 ரன்களை பரிசளித்த பாகிஸ்தான் வீரர்கள் அதற்கு தண்டனையாக மோதிக் கொண்டதால் ஏற்பட்ட காயத்தால் களத்திலேயே சாய்ந்தனர். பார்ப்பதற்கு இது பரிதாபமான நிகழ்வு என்றாலும் யாருமே இதற்காக பரிதாப படவில்லை.

ஏனெனில் வரலாற்றில் இதே போல எளிதாக கிடைக்க வேண்டிய கேட்ச்களை இதேபோல் மோதிக் கொண்டு பாகிஸ்தான் கோட்டை விட்டுள்ளது. அதிலும் சயீத் அஜ்மல் மற்றும் சோயப் மாலிக் ஆகியோர் இதே போன்ற ஒரு தருணத்தில் இவர் பிடிப்பார் என்று அவரும் அவர் பிடிப்பார் என்று இவரும் கோட்டை விட்ட கேட்சை நினைத்து பார்க்கும் ரசிகர்கள் உலகமே அழிந்தாலும் பாகிஸ்தானின் இந்த சொதப்பல் மாறாது என கலாய்க்கிறார்கள்.

Advertisement