வீடியோ : அழாதே தம்பி நான் தான் வந்துட்டேன்ல, குட்டி இந்திய ரசிகர்கரின் கண்ணீரை துடைத்த ரோஹித் சர்மா

Indian Fans
- Advertisement -

இலங்கை எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்று 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவக்கிய இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்கள் அடங்கிய முதன்மை அணி விளையாடுகிறது. எனவே 2011க்குப்பின் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையை வென்று 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க இப்போதே தயாராகும் இந்திய அணியினர் இத்தொடரை வெல்வதற்கு போராட உள்ளனர்.

முன்னதாக கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் காலம் கடந்த அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணி உருவாக்க வேண்டும் என்பதே தற்போதைய நிலைமையில் இந்திய ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. அதை ஏற்றுக் கொண்ட பிசிசிஐயையும் முதலில் டி20 கிரிக்கெட்டில் அதற்கான வேலைகளை ஹர்திக் பாண்டியா தலைமையில் துவங்கியுள்ளது.

- Advertisement -

அழாதே தம்பி:
மறுபுறம் தற்போது சுமாரான பார்மில் இருந்தும் நட்சத்திர அந்தஸ்தையும் இதற்கு முன் பெற்றுக் கொடுத்த வெற்றிகளையும் கருத்தில் கொண்டு 2023 உலகக் கோப்பையில் கடைசி வாய்ப்பாக ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு காலத்தில் ஹிட்மேன் என்று கொண்டாடும் வகையில் அடித்து நொறுக்கி அபாரமாக செயல்பட்ட ரோகித் சர்மா 2019 உலகக் கோப்பைக்குப் பின் கேப்டனாக பொறுப்பேற்ற பின் ரன்களை குவிக்க முடியாமல் ரொம்பவே தடுமாறி வருகிறார்.

அதிலும் வரலாற்றிலேயே முதல் முறையாக 2022 ஐபிஎல் தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் 2012க்குப்பின் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதத்தை அடிக்க தவறினார். அத்துடன் முழுமையான ஃபிட்னஸ் இல்லாமல் அடிக்கடி காயத்தையும் சந்திக்கும் அவர் தற்சமயத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். எனவே தன் மீதான விமர்சனங்களை துடைத்து இந்தியாவுக்கு உலகக்கோப்பை வென்று கொடுக்க இத்தொடரிலிருந்து அவர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது.

- Advertisement -

அந்த வகையில் இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 10ஆம் தேதியன்று அசாம் கௌகாத்தி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்காக சில நாட்கள் முன்பாகவே அங்கு சென்றடைந்த இந்திய அணியினர் நேற்று மாலை தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பார்முக்கு திரும்புவதற்காக கடினமான பயிற்சிகளை மேற்கொண்ட ரோகித் சர்மா இறுதியில் தன்னை காண வந்த ரசிகர்களை பார்ப்பதற்காக சென்றார்.

அப்போது கூட்டத்தில் ஒரு குட்டிச் சிறுவன் அவரைப் பார்த்தே ஆக வேண்டுமென்று அடம் பிடித்து அழுது கொண்டிருந்ததை கவனித்த ரோகித் சர்மா நேராக அவரிடம் சென்று “ஏன் நீ அழுகிறார். நீ சின்னக் குழந்தை” என்று சொல்லி மனதை தேற்றினார். அத்துடன் “உனக்கு பெரிய கன்னங்கள் உள்ளது” என்று கொழு கொழுவென அழகாக இருந்த அந்த குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி அவரது கண்ணீரை துடைத்த ரோஹித் சர்மா அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதையும் படிங்க:ராகுலுக்காக சிறப்பாக செயல்பட்ட அவரை ட்ராப் பண்ண கொடுமை இந்தியாவில் தான் நடக்குது – ரோஹித்தை தாக்கிய வெங்கடேஷ் பிரசாத்

அத்துடன் இதர ரசிகர்களிடமும் சிரித்த முகத்துடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்படி பொதுவாகவே ரசிகர்களிடம் எப்போதும் அன்பு காட்டும் ரோகித் சர்மா கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது தாம் அடித்த சிக்ஸர் ஒரு சின்ன குழந்தையின் மேல் பட்டதால் மிகவும் பதற்றமடைந்தார். இறுதியில் போட்டி முடிந்த பின் அவரை நேராக சென்று சந்தித்த ரோஹித் சர்மா பாசத்தை வெளிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement