ராகுலுக்காக சிறப்பாக செயல்பட்ட அவரை ட்ராப் பண்ண கொடுமை இந்தியாவில் தான் நடக்குது – ரோஹித்தை தாக்கிய வெங்கடேஷ் பிரசாத்

Venkatesh prasad KL rahul
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையில் வென்ற இந்திய அடுத்ததாக துவங்கியுள்ள ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் விராட் கோலி, ராகுல் உள்ளிட்ட முதன்மை நட்சத்திர கிரிக்கெர் வீரர்கள் விளையாடுகிறார்கள். இருப்பினும் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தடவலாக செயல்பட்டு தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்த கேஎல் ராகுல் துணை கேப்டன் பதவியை இழந்து இத்தொடருக்கான அணியில் விக்கெட் கீப்பராக மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எனவே அவர் விளையாடிய ஓப்பனிங் இடத்தில் இஷான் கிசான் – சுப்மன் கில் ஆகியோரில் களமிறங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது. அதில் சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்து நல்ல பார்மில் இருக்கும் இஷான் கிஷானுக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சுமன் கில் தான் தம்முடன் ஓப்பனிங் வீரராக களமிறங்குவார் என்று ரோகித் சர்மா முன்கூட்டியே செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
அதை இன்று துவங்கிய முதல் போட்டியிலும் டாஸ் வென்று மேலும் உறுதிப்படுத்திய ரோகித் சர்மா இசான் கிசானை பெஞ்சில் அமர வைத்தார். இந்த முடிவுக்கு பெரும்பாலான இந்திய ரசிகர்கள் அதிருப்தியை தான் வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் அடித்து நொறுக்க வேண்டிய பவர் பிளே ஓவர்களில் ராகுல் தடவலாக செயல்பட்டார் என்பதற்காகவே கழற்றி விடப்பட்டார். ஆனால் அவருக்கு பதில் தேர்வு செய்யப்பட்டுள்ள கில்லும் தொடர்ச்சியாக நல்ல ரன்களை அடித்தாலும் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவிப்பதற்கு தடுமாறுவதை சமீபத்திய இலங்கை டி20 தொடரில் பார்த்தோம்.

மறுபுறம் ஓரிரு போட்டிகளில் தடுமாறினாலும் பெரும்பாலும் அதிரடியாக விளையாடக்கூடிய இசான் கிசான் சொதப்பலாக செயல்பட்டு வரும் ராகுலுக்கு பதில் விக்கெட் கீப்பராகவும் செயல்படும் திறமை கொண்டவர். அது போக ரோஹித் – கில் என்ற வலது – வலது கை ஓப்பனிங் ஜோடியை விட ரோஹித் – இஷான் என்ற வலது – இடது கை ஓப்பனிங் ஜோடி எதிரணிக்கு குழப்பத்தையும் சவாலையும் ஏற்படுத்தும் வகையில் அமையும். அப்படி ஒரு கல்லில் 3 மாங்காய் அடிக்கும் மிகச் சிறப்பான யுக்தியை ரோகித் சர்மா கோட்டை விட்டுள்ளதாக ரசிகர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -

அப்படி ரசிகர்களைப் போலவே அதிருப்தியை தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் சொதப்பலாக செயல்படும் ராகுல் போன்ற ஒருவருக்காக உலகிலேயே முந்தைய போட்டியில் இரட்டை சதமடித்தும் அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்காத நிலைமை இந்திய அணியில் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “இந்தியா விளையாடிய கடைசி ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து கோப்பையை இழந்து தடுமாறிய போது கடைசி போட்டியில் இரட்டை சதமடித்தவருக்கு வாய்ப்பு கொடுக்க என்பதே நியாயம் என்று நினைக்கிறேன்”

“கில்லுக்காக அனைத்து வாய்ப்புகளையும் கொடுங்கள் ஆனால் அதற்காக இரட்டை சதமடித்த வீரரை நீங்கள் கைவிட முடியாது. ஒருவேளை நீங்கள் கில்லை விளையாட நினைத்தால் இஷான் கிஷானை 3வது இடத்தில் விளையாட வைத்து கேஎல் ராகுலுக்கு பதிலாக விக்கெட் கீப்பங் செய்ய வைக்க அனுமதித்திருக்கலாமே. சமீப காலங்களில் நாம் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தடுமாறுவதற்கு இது போன்ற மாற்றங்களே முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் மாற்றங்கள் என்ற பெயரில் இப்படி சிறப்பாக செயல்படும் வீரரை கழற்றி விடுவதும் சுமாராக செயல்படுபவரை தக்க வைப்பதும் தொடர்கதையாகி விட்டது”

இதையும் படிங்கசர்வதேச டி20 கிரிக்கெட்டில் விரைவில் சூர்யகுமார் உடைக்க வாய்ப்புள்ள ரோஹித் சர்மாவின் 3 முக்கிய சாதனைகள்

“அதே போல் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் சதமடித்திருந்தும் டி20 ஃபார்ம் அடிப்படையில் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டார். மறுபுறம் கேஎல் ராகுல் 2 இன்னிங்ஸ்கலை தவிர தொடர்ந்து சுமாராக செயல்பட்டாலும் தக்க வைக்கப்பட்டுள்ளார். இங்கே நல்ல செயல்பாடுகள் முதன்மையான அளவுருவாக இருப்பதில்லை என்பது வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

Advertisement