கடைசி ஓவரில் 4. 6. 4. 6. 2.. 247.67 ஸ்ட்ரைக் ரேட்டில் மாஸ் ஃபினிஷிங்.. வெற்றியை தலைகீழாக மாற்றிய ரிங்கு

Rinku Singh
- Advertisement -

சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் நேபாளை 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. ஹங்கொழு நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய 202/4 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக நேபாள் பாவலர்களை பந்தாடிய ஜெய்ஸ்வால் அபாரமான சதுமடித்து 100 (48) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் அதிரடியாக 37* (15) ரன்களும் எடுக்க நேபாள் சார்பில் அதிகபட்சமாக திபேந்தரா சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதை தொடர்ந்து 203 ரன்களை துரத்திய நேபாள் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவர்களில் 179/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஃபினிஷர் ரிங்கு:
அந்த அணிக்கு அதிகபட்சமாக திபேந்திரா சிங் 32 (15) ரன்கள் எடுக்க நிலையில் போராடிய நேபாளை வெற்றி காண முடியாத அளவுக்கு பந்து வீச்சில் கட்டுக்கோப்பாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான், ரவி. பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். முன்னதாக இந்த போட்டியில் என்னதான் ஜெய்ஸ்வால் 100 ரன்கள் அடித்தாலும் அவரை தவிர்த்து ருதுராஜ் 25, திலக் வர்மா 2, ஜிதேஷ் சர்மா 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் பின்னடைவை சந்தித்த இந்தியா 18 ஓவரில் 163/4 என தடுமாறிய போது கடைசி நேரத்தில் ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடினர். ஆனால் அப்போதும் 19 ஓவரில் 177/4 என்ற நிலையில் தடுமாறிய இந்தியா 200 ரன்கள் தொடுமா என்ற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அப்போது பொஹாரா வீசிய கடைசி ஓவரில் வேட்டையை துவக்கிய ரிங்கு சிங் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து 2வது பந்தில் மிட் விக்கெட் திசையில் சிக்சர் பறக்க விட்டு 3வது பந்தில் பேக்பேர்ட் பாய்ண்ட் பகுதியில் பவுண்டரியை தெறிக்க விட்டார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 5வது பந்தில் ஸ்ட்ரைக்கை பெற்ற அவர் அதிரடியான சிக்சர் அடித்து கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அந்த வகையில் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 37* (15) ரன்களை 246.67 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த ரிங்கு சிங் அபாரமான ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் சிவம் துபே தம்முடைய பங்கிற்கு 25* (19) ரன்கள் அடித்ததால் இந்தியா 202/4 ரன்கள் எடுத்தது. ஆனால் கடைசியில் பார்த்தால் ரிங்கு சிங் அடித்த 37* ரன்கள் தான் இந்தியாவின் 23 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியில் முக்கிய பங்காற்றியது.

அந்தளவுக்கு கடைசி நேரத்தில் வந்து வெற்றியை மாற்றிய அவருடைய ஆட்டத்தால் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் முதல் செமி ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற்றது. மொத்தத்தில் ஐபிஎல் தொடரில் 5 சிக்ஸர்கள் அடித்து இந்தியாவுக்காக அறிமுகமாகி ஏற்கனவே அயர்லாந்துக்கு எதிரான தொடரில் மிரட்டிய ரிங்கு சிங் தற்போது இப்போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு வருங்கால ஃபினிஷராக உருவெடுத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement