நேரலையில் விராட் கோலியை விமர்சித்த ரமீஸ் ராஜாவை கலாய்த்த டிவி தொகுப்பாளர் – வைரல் வீடியோ உள்ளே

VIrat Kohli Ramiz Raja
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலககோப்பை 2022 தொடர் வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. ஏனெனில் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பதுடன் 1992 முதல் தொடர்ச்சியாக தங்களை தோற்கடித்து வந்த மோசமான கதைக்கு கடந்த டி20 உலக கோப்பையில் முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுதியது.

மேலும் சமீபத்திய ஆசிய கோப்பை லீக் சுற்றில் தங்களை தோற்கடித்த இந்தியாவை சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்து பழி வாங்கிய பாகிஸ்தான் பைனலுக்கு செல்ல விடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. எனவே அதற்கு பழிவாங்க இந்தியா காத்திருக்கும் நிலையில் மறுபுறம் கடந்த முறை போலவே இம்முறையும் வெல்வோம் என்று பாகிஸ்தான் சவால் விட்டு வருகிறது. அதைவிட சம்பந்தமின்றி இந்தியாவையும் அதனுடைய வீரர்களையும் தேவையற்ற விவாதங்களில் சம்பந்தப்படுத்தி பேசுவதை அந்நாட்டை சேர்ந்தவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

- Advertisement -

தேவையா இது:
குறிப்பாக ஆசிய கோப்பை பைனல் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் மண்ணை தோற்ற போது வரலாற்றில் இதற்கு முன் ஜாம்பவான் வீரர்கள் இருந்தும் தோற்கடிக்க முடியாத பணக்கார இந்தியாவை தற்போதைய அணி தோற்கடித்ததை புரிந்துகொள்ளுமாறு விமர்சனங்களுக்கு அந்நாட்டு வாரிய தலைவர் ரமீஷ் ராஜா வேண்டுமென்றே வம்பிழுத்து பதிலடி கொடுத்தார். மேலும் ஆசிய கோப்பை பைனலுக்கு செல்லாததை மறந்து விட்டு விராட் கோலி என்ற தனிநபர் சதமடித்ததை இந்தியர்கள் கொண்டாடியதாக தெரிவித்த அவர் அதுவே பாபர் அசாம் சதமடித்திருந்தால் பாகிஸ்தான் ரசிகர்கள் அவ்வாறு கொண்டாடாமல் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் சதமடித்ததற்கு குறை சொல்வார்கள் என்றும் கூறியிருந்தார்.

அந்தக் கருத்தை நேரலை நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த போது 3 வருடங்கள் கழித்து 71ஆவது சதத்தை விராட் கோலி அடித்ததால் மொத்த இந்தியாவும் கொண்டாடியதாக செய்தி தொகுப்பாளர் பதிலடி கொடுத்தார். அதற்கு 4 கேட்ச்களை கோட்டை விட்டதால் விராட் கோலி தப்பிப் பிழைத்து சதமடித்தார் என்று ரமீஸ் ராஜா காலாய்க்கும் வகையில் பேசினார். அதற்கு இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோற்றபோது “குட்ரட் கா நிஷாம்” அதாவது “வெற்றி தோல்வி என்பது இயற்கையின் விதி” என்று பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் சக்லைன் முஸ்டக் தெரிவித்தது போல் “கேட்ச் விட்டதும் இயற்கையின் விதி” என செய்தி தொகுப்பாளர் நெத்தியடி பதிலை கொடுத்தார்.

- Advertisement -

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் ரமீஸ் ராஜா பேசியது பின்வருமாறு. “முன்பெல்லாம் முதல் சுற்றிலேயே நாங்கள் தோற்றோம். ஆம் நாங்கள் ஆசிய கோப்பை பைனல் சென்று சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் அன்று மோசமான நாளாக அமைந்தது பரவாயில்லை. இருப்பினும் எங்களை விட இந்த ஆசிய கோப்பையில் மோசமாக விளையாடிய அணிகளும் இருந்தன. அதாவது இந்தியா பைனலுக்கு செல்லாததற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சதமடித்தால் அதை மறந்து விட்டு இந்திய ரசிகர்களும் ஊடகங்களும் அவரை கொண்டாடினார்கள். அதுவே பாபர் அசாம் சதமடித்திருந்தால் நாம் அதை செய்வோமா? நாமாக இருந்தால் டேவிட் வார்னர் 147.3 ஸ்டிரைக் ரேட்டில் சதமடித்தார், பாபர் 135 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே சதமடித்தார் என்று அதற்கும் விமர்சித்திருப்போம்” என்று கூறினார்.

அதற்கு தொகுப்பாளர் கொடுத்த பதிலடி பின்வருமாறு. “3 வருடங்கள் கழித்து விராட் கோலி 71வது சதத்தை அடித்ததால் அவர்கள் கொண்டாடினார்கள். இல்லையேல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

- Advertisement -

அதற்கு ரமீஸ் ராஜா கூறியது. “நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? அவர் போயும் போயும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 4 கேட்ச்களில் இருந்து தப்பி சதமடித்தார். அதுவே ஒரு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அவ்வாறு சதமடித்திருந்தால் நம்முடைய மீடியா சும்மா விடுமா?” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs RSA : 3 போட்டியில் 3 கேப்டன் மாற்றம். என்ன நடக்கிறது? – தெ.ஆ அணி சந்தித்துள்ள இக்கட்டான நிலை

அதற்கு செய்தி தொகுப்பாளர் கூறியது. “அந்த 4 கேட்ச்களை நான் இயற்கையின் விதி என்று கூற விரும்புகிறேன். ஏனெனில் இப்போதெல்லாம் “குட்ரட் கா நிஷாம்” என்பது மிகவும் பிரபலமாக உள்ளது” என்று கலாய்த்து பதிலடி கொடுத்தார்.

Advertisement