IND vs RSA : 3 போட்டியில் 3 கேப்டன் மாற்றம். என்ன நடக்கிறது? – தெ.ஆ அணி சந்தித்துள்ள இக்கட்டான நிலை

David-Miller
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் இந்த தொடரானது தற்போது சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

INDvsRSA

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகார் தவான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது பந்துவீசி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் டாஸ் போட வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மட்டுமே கேப்டனாக சில போட்டிகளில் செயல்பட்டுள்ள டேவிட் மில்லர் இம்முறை ஒருநாள் கிரிக்கெட்டிலும் கேப்டனாக அறிமுகமாகியுள்ளார். இதற்கு காரணம் யாதெனில் கடந்த இரண்டாவது போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்ட மகாராஜுக்கு இன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

David Miller IND vs Sa

இதன் காரணமாக இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ வீரரான டேவிட் மில்லர் கேப்டனாக விளையாடுகிறார். அதோடு மட்டுமின்றி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்று போட்டியிலும் வெவ்வேறு கேப்டன்கள் விளையாடி உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

முதல் போட்டியில் பவுமா கேப்டனாக விளையாடினார். ஆனால் இரண்டாவது போட்டியின் போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக அவருக்கு பதிலாக மகாராஜ் கேப்டன்சி செய்தார். தற்போது இரண்டாவது போட்டியில் விளையாடிய மஹாராஜுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மூன்றாவது போட்டியில் டேவிட் மில்லர் கேப்டனாக விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இதுதான் – கிரிஸ் கெயில் கணிப்பு

இப்படி ஒரே தொடரின் மூன்று போட்டியிலும் மூன்று வெவ்வேறு கேப்டன்கள் அணியை நடத்தும் முதல் அணியாக கூட தென்னாப்பிரிக்க அணி ஒரு சாதனை செய்திருக்கலாம் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

Advertisement