டி20 உலகக்கோப்பை : இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இதுதான் – கிரிஸ் கெயில் கணிப்பு

Gayle
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் டி20 உலக கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடுவதால் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த உலககோப்பை தொடரானது இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறவுள்ளதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Cup

- Advertisement -

எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடப் போகும் பேட்ஸ்மேன்கள் யார்? சிறப்பாக பந்துவீசப்போகும் பவுலர்கள் யார்? எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் வழங்கி வருகின்றார்.

அந்த வகையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெயில் இந்த டி20 உலககோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணிகள் எது என்பது குறித்த தனது கருத்தினை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் நிச்சயம் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் என்று நினைக்கிறேன்.

wivsaus

வெஸ்ட் இண்டீஸ் அணியில் தற்போது பொல்லார்டு, ரசல், பிராவோ ஆகியோர் இல்லாததால் கேப்டனுக்கு சற்று சவாலாக தான் இருக்கும். ஆனாலும் அணியில் உள்ள இளம் வீரர்கள் நிச்சயம் தங்களது சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். அப்படி இந்த தொடரில் அனைவரும் ஜொலிக்க ஆரம்பித்தால் அவர்களால் எந்த ஒரு எதிரணியையும் வீழ்த்த முடியும்.

- Advertisement -

இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சூழ்நிலையை சமாளித்து மைதானத்திற்கு ஏற்றார் போல் விளையாட ஆரம்பித்தால் நிச்சயம் கோப்பையை வெல்லும் அளவிற்கு கூட அவரிடம் திறமை உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் கிரிஸ் கெயிலின் இந்த கருத்திற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளத்தில் பெரிய விமர்சனமே எழுந்துள்ளது.

இதையும் படிங்க : கேப்டன்ஷிப் என்பதே வெறும் நடிப்பு – புதிய தத்துவம் சொன்ன ரமீஸ் ராஜா, கலாய்க்கும் ரசிகர்கள்

ஏனெனில் இன்னும் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு கூட நீங்கள் தகுதி பெறவில்லை. அதற்குள் இறுதிப்போட்டி வரை வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடும் என்று கூறுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். முதலில் தகுதி சுற்று போட்டிகளில் ஜெயிக்கட்டும் அப்புறம் கோப்பையை பற்றி யோசியுங்கள் என்று ரசிகர்கள் இந்த கருத்திற்கு தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement